Food
கோடையில் உடல் சூட்டினால் நீர்ச்சத்து குறைந்து விரைவில் சோர்வாகிவிடுவோம். இந்த சமயத்தில் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க நுங்கு உதவும்.
நுங்கு உடலுக்கு குளிர்ச்சி தரும். கோடையில் நல்ல காலை உணவாக கருதப்படுகிறது.
நுங்கில் கார்போஹைட்ரேட், பைட்டோநியூட்ரியண்ட்ஸ், கால்சியம் ஆகியவை உள்ளன. குறைந்த கலோரி கொண்டது. உடல் எடையை அதிகரிக்காது.
நுங்கில் உள்ள வைட்டமின் பி-12 வயிற்று அமிலத்தன்மையை சீராக வைக்கும். உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது.
நுங்கில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் சி, ஏ, ஈ, கே ஆகியவை உள்ளன. இது தவிர, இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் ஆகிய தாதுக்களும் உள்ளன.
காலையில் எழுந்ததும் அசிடிட்டியால் ஏற்படும் தலைவலியை நுங்கு குணமாக்கும். செரிமானம் மேம்பட்டு மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
கோடையில் ஏற்படும் சரும வெடிப்பு, சொறி ஆகிய பிரச்சனையை நுங்கு குணமாக்கும். தோல் அரிப்பு, எரிச்சல் சரியாகும்.
கோடையில் அதிக வியர்வை வெளியேறுவதால், உடலில் நீர்ச்சத்து குறையும். இதை நீக்கி நுங்கு உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
நுங்கில் உள்ள வைட்டமின்-சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். கோடையில் நுங்கு சாப்பிடுவதால் உடலை நோயில் இருந்து பாதுகாக்கும்.
கோடையில் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல், தோல் அரிப்பு, வயிற்று வலி போன்ற எல்லா பிரச்சனைக்கும் நுங்கு ஏற்றது. நுங்கின் குளிர்ச்சி பண்புகள் உடலை பராமரிக்கும்.