
கர்ப்பம் என்பது ஒரு பெண்ணி வாழ்க்கையில் நடக்கும் மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்றால், அந்த வீடு மகிழ்ச்சியாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், கருவுற்ற ஒரு பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தால் அந்த வீடு இன்னும் மகிழ்ச்சியில் துள்ளும். ஆனால், இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், அதாவது இரட்டை குழந்தை எப்படி உருவாகிறது என்று தான்.
இது குறித்த பல கட்டுக் கதைகள் நம்மிடையே பரவியுள்ளது. இதுகுறித்து, ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விதமாக சொல்லியிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில் இன்றைய கட்டுரையில், இரட்டை குழந்தை எப்படி உண்டாகிறது மற்றும் ஒரு பெண் தனது வயிற்றில் இரட்டை குழந்தையை சுமக்கிறாள் என்றால், கர்ப்ப காலத்தில் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
இரட்டை குழந்தை உருவாவதற்கான காரணம் :
ஒரு பெண் இரட்டை குழந்தையை பெற்றெடுப்பதற்கு பல காரணங்கள் சொல்லலாம். உதாரணமாக, குடும்பத்தில் மரபணு நிலை, கர்ப்பகால சிகிச்சை போன்றவையாகும். ஆனால் இதையும் தவிர, ஒரு பெண்ணின் கருவுற்ற கருமுட்டையானது விந்தணுக்களை அடையும் போது அவளது கர்ப்பப்பையில் ஏற்கனவே இரண்டு முட்டைகள் இருந்தால், அந்தப் பெண்ணிற்கு இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். அதுமட்டுமின்றி, இரட்டையர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று, ஒருவர் மற்றவரைப் போலல்லாமல் வித்தியாசமாக இருப்பார்கள். மற்றொன்று இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள்.
இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் இந்த 6 அறிகுறிகள் வந்தா அசால்டா இருக்காதீங்க.. பிரச்சனையாகிடும்!
வயிற்றில் இரட்டை குழந்தை இருப்பதற்கான அறிகுறிகள் :
கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணிற்கு ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து அவள் தனது வயிற்றில் சுமப்பது இரத்த குழந்தை தான் என்று சொல்லிவிடலாம். அந்த அறிகுறிகள் என்னென்ன என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை..
1. அதிக ரத்த போக்கு : உறுப்பினர்கள் கர்ப்ப காலத்தில் இயல்பை விட அதிகமாக இரத்தப்போக்கு ஏற்பட்டால், இதனுடன் காய்ச்சலும் இருந்தால் அந்தப் பெண் தனது வயிற்றில் இரட்டை குழந்தையை சுமக்கிறாள் என்று அர்த்தம்.
2. அளவுக்கு அதிகமாக பசி உணர்வு ஏற்படுவது : பொதுவாகவே ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால் அப்பெண்ணிற்கு அவ்வளவாக பசி இருக்காது. ஒருவேளை பசி எடுத்தாலும் அதிகமாக சாப்பிட மாட்டார்கள். இதுவே ஒரு பெண் இரட்டை குழந்தைக்கு தாயாகப் போகிறாள் என்றால், அந்தப் பெண் வழக்கத்தை விட அளவுக்கு அதிகமாக சாப்பிடுவாள். எவ்வளவுதான் சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் பசி உணர்வு ஏற்படும்.
3. அதிக எடை : சாதாரணமாக ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவளது எடை கொஞ்சம் அதிகரிக்கும். அதுவே இரட்டை குழந்தையை சுமக்கும் பெண்ணின் எடையானது வழக்கத்தை விட ரொம்பவே அதிகமாக இருக்கும். காரணம் அவளது வயிற்றில் இரண்டு கருக்கள், நச்சுக்கொடிகள் மற்றும் அதிக அம்னோடிக் திரவம் இருப்பதால்தான்.
4. அதிக வலி மற்றும் பலவீனம் : வயிற்றில் இரட்டை குழந்தையை சுமக்கும் பெண்ணிற்கு தினமும் காலை எழும்போது அதிக வலி மற்றும் பலவீனமாக உணர்த்தல், அதிகப்படியான சோர்வு மற்றும் வாந்தி போன்ற பிரச்சினை வரும்.
5. அடிக்கடி சிறுநீர் கழிப்பது : பொதுவாகவே கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு வருவது வழக்கம். காரணம் வயிற்றில் குழந்தை வளர வளர கர்ப்பப்பையானது சிறுநீர் பையை அழுத்தும். இதனால் கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதுவே, ஒரு பெண் தனது வயிற்றில் இரட்டைக் குழந்தையை சுமக்கிறாள் என்றால் அப்பெண் மற்றவர்ககை விட அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலையில் உண்டாகும்.
இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் உடலுறவு வைக்கலாமா? இதனால் கருச்சிதைவு ஏற்படுமா? உண்மை இதோ!!