தற்போதைய நவீன காலக்கட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டது. குழந்தைகள் தங்கள் பெற்றோரையே பிரதிபலிக்கின்றன. பெற்றோர் பேசும் வார்த்தைகள், பெற்றோரின் நடத்தைகளை பார்த்தே குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர்.
எனவே பெற்றோரின் வார்த்தைகளுக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. பெற்றோர் பயன்படுத்தும் வார்த்தைகளும் மொழியும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் சுயமரியாதையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் சொல்வதைத் தவிர்க்க வேண்டிய 7 விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அழ வேண்டாம் என்று கூறுவது
“ முதலில் அழுவதை நிறுத்து” என்று எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தையிடம் சொல்லி இருப்பார்கள். குழந்தை அடம் பிடித்து அழும் போது அல்லது கோபமாக இருக்கும் போதோ அந்த தருணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரைவான தீர்வாகத் தோன்றலாம், ஆனால் அது உண்மையில் தீங்கு விளைவிக்கும். ‘எமோஷன்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, குழந்தையின் உணர்வுகளை நிராகரிப்பது, தங்களுக்கு மதிப்பில்லை அல்லது தாங்கள் தவறானவர்கள் என்று எண்ணத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும்.
மாறாக, அவர்களின் உணர்வுகளை அங்கீகரித்து, அவர்களின் உணர்ச்சிகளைச் செயல்படுத்த உதவுங்கள். "நீங்கள் மிகவும் வருத்தமாக இருப்பதை நான் காண்கிறேன். என்ன தவறு என்று சொல்ல முடியுமா?" என்று உங்கள் குழந்தையிடம் பேசுங்கள். உங்கள் குழந்தை தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், உணர்ச்சி ரீதியான ஒழுங்குமுறைகளைக் கற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கிறது.