சாப்பாடு, தண்ணீர் இரண்டும் இல்லாமல் ஒரு வாரம் மட்டும் தான் ஒருவரால் வாழ முடியுமாம். தண்ணீர் குடித்துவிட்டு, உணவு மட்டும் உண்ணாமல் இருப்பவர்கள் 2 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை கூட வாழலாம். ஏனெனில் தண்ணீர், அவர் உடலில் ஏற்கனவே உள்ள கொழுப்பு, புரதத்தின் அளவு அவரின் வாழ்நாளை நீட்டிக்கிறது. இந்த விஷயத்தில் ஒல்லியான நபரை விடவும் பருமான நபரின் ஆயுள் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
சில ஆய்வுகள், சாப்பிடாமல் 3 வாரங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் எனவும் சொல்கின்றன. தண்ணீர் கூட குடிக்காதவர்கள் 3 முதல் 4 நாட்களே வாழ முடியும் எனவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் தண்ணீர் அருந்தி உணவை மட்டும் தவிர்ப்பவர்கள் 3 வாரங்கள் வாழ முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.