1980களின் முற்பகுதியில் தொடங்கி 1990களின் பிற்பகுதி வரை பிறந்தவர்கள் மில்லினியல் என்று அழைக்கப்படுகின்றனர். அதன்பின்னர் பிறந்தவர்கள் Z தலைமுறை என்று அழைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் 18 முதல் 34 வயது வரை உள்ளவர்களில் 70% பேர் தங்களுக்கு வரும் மொபைல்போன் அழைப்புகளை ஏற்பதில்லை என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தங்களுக்கு வரும் போன்களை இவர்களை புறக்கணிப்பதாகவும், சிலர் மெசேஜ் மூலம் பதிலளிப்பதாகவும் தெரியவந்துள்ளது. தங்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் அவர்கள் யார் என்று இணையத்தில் தேடுவதாகவும் சிலர் கூறி உள்ளனர்.
Uswitch என்ற நிறுவனம் 2000 பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் 18 – 34 வயதுடைய 70% பேர் தங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு மெசேஜ் மூலம் பதிலளிப்பதையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.