மிகவும் ஆபத்தான நோய்களில் புற்றுநோய் ஒன்றாகும். ஏனெனில் இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறியாவிட்டால், பின்னர் சிகிச்சை அளிப்பது கடினம். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது. எனவே அறிகுறிகளைக் கண்டறிவது கடினமாக இருக்கும், ஏனெனில் அவை பெரும்பாலும் உடலுக்குள் ஏற்படுகின்றன, எனவே அவை எளிதில் புலப்படாது.
ஆனால் புற்றுநோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் முக்கியம். இதனால் நோய்க்கு சிகிச்சையளிப்பது எளிது. நீங்கள் சாப்பிடும் போது கூட சில புற்றுநோய் அறிகுறிகள் தோன்றக்கூடும். இந்த அறிகுறிகள் ஆரம்பத்தில் நெஞ்செரிச்சல் என்று தவறாக கருதப்படுவதால், இது பெரும்பாலும் நோயறிதலை தாமதப்படுத்தும். எனவே இந்த அறிகுறிகளை புறக்கணிக்காமல் இருப்பது முக்கியம்
குறிப்பாக கணைய புற்றுநோயால் பல்வேறு செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உணவு நேரத்தில் கவனிக்க வேண்டிய சில பொதுவான அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. விழுங்குவதில் சிரமம்
சாப்பாட்டை விழுங்கும் போது வலி அல்லது அசௌகரியம் மற்றும் உணவு தொண்டை அல்லது மார்பில் சிக்கியது போன்ற உணர்வு கவனிக்கப்பட வேண்டிய ஒரு அறிகுறியாகும். இது பெரும்பாலும் நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற விழுங்கும் பிரச்சினைகளாக தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். இது தொண்டை புற்றுநோய் அல்லது வயிற்று புற்றுநோயைக் குறிக்கலாம்.
2. தொடர்ந்து அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல்
மார்பு அல்லது வயிற்றில் எரியும் உணர்வு, வீக்கம், அடிக்கடி துர்நாற்றம் வீசுதல் ஆகியவை புற்றுநோயைக் குறிக்கலாம். இதுவும் நெஞ்செரிச்சல் இரைப்பை அழற்சி அல்லது வயிற்றுப் புண்கள் என தவறாக கண்டறியப்படலாம், ஆனால் இந்த அறிகுறிகள் வயிற்று புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய் ஆகியவற்றைக் குறிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
3. விரைவில் நிரம்பிய உணர்வு
சிறிதளவு உணவை மட்டுமே சாப்பிட்ட உடனே வயிறு நிரம்பியதாக உணர்ந்தால், இது கவனிக்க வேண்டிய மற்றொரு அறிகுறியாகும். பொதுவாக இது வயிற்றுப் புண்கள் அல்லது மோசமான பசியின்மை ஆகிய பிரச்சனைகள் என்று கருதப்படலாம். ஆனால் இது பெரும்பாலும் கணைய புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் வயிற்று புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகும்.
five signs of colon cancer
குமட்டல் அல்லது வாந்தி
அடிக்கடி குமட்டல், சாப்பிட்ட உடனேயே வாந்தி, அல்லது இரத்த வாந்தி ஆகியவை இருந்தால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவை உணவு விஷம், இரைப்பை அழற்சி அல்லது ஒற்றைத் தலைவலி ஆகியவற்றின் அறிகுறிகள் என்று தவறாக புரிந்துகொள்ளப்படலாம். ஆனால் இது கணைய புற்றுநோய், வயிற்று புற்றுநோய் மற்றும் மூளைக் கட்டிகளின் ஆரம்ப அறிகுறியாகும்
விவரிக்க முடியாத எடை இழப்பு
சாதாரண அல்லது குறைந்த பசியின்மை இருந்தபோதிலும், எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் உடல் எடை வேகமாக குறைந்தால் கவனிக்க வேண்டிய ஒன்று. இது மன அழுத்தம், ஹைப்பர் தைராய்டிசம் அல்லது உணவு மாற்றங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று பலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். ஆனால் இது வயிறு, கணைய புற்றுநோய், உணவுக்குழாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உட்பட பல்வேறு புற்றுநோய்களின் அறிகுறியாகும்.
...
6. வயிற்று வலி அல்லது அசௌகரியம்
அடிவயிற்றில் தொடர்ந்து அல்லது கடுமையான வலி, குறிப்பாக சாப்பிட்ட பிறகு இருந்தால் அது எச்சரிக்கை அறிகுறியாகும். இது பெரும்பாலும் பித்தப்பைக் கற்கள், ஐபிஎஸ் அல்லது வயிற்றுப் புண்கள் என கருத்தில் கொள்ளப்படுகிறது. ஆனால் இது கணைய புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறியாகும், குறிப்பாக நீங்கள் படுக்கும்போது மோசமாக இருந்தால், கல்லீரல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் என ஏதேனும் ஒரு வகை புற்றுநோயாக இருக்கலாம்.
குடல் பழக்கத்தில் மாற்றம்
வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது மலத்தின் நிலைத்தன்மையில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மலம் கழிப்பது மற்றொரு சிவப்புக் கொடியாகும். பலர் இதை உணவு அலர்ஜி, உணவு சகிப்புத்தன்மை என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். ஆனால் இது பெரும்பாலும் கணைய புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகும்.
cancer risk
மஞ்சள் காமாலை
குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்ட பிறகு, தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாதல், அடர் நிறத்தில் சிறுநீர் மற்றும் வெளிர் மலம் ஆகியவற்றைக் கவனிக்கவும். இது பெரும்பாலும் ஹெபடைடிஸ், பித்தப்பை அல்லது கல்லீரல் நோய் என்று தவறாகக் கருதப்படுகிறது. ஆனால் இது கணைய புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் பித்த நாள புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகும்.
இந்த அறிகுறிகளில் பல நெஞ்செரிச்சல், மன அழுத்தம். வயிறு பிரச்சனை போன்ற சிறிய பிரச்சனைகளாக முதலில் ஏற்படலாம். இந்த அறிகுறிகளில் ஏதேனும் 10 நாட்களுக்கு அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் ஒரு சுகாதார நிபுணரிடம் பேசுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 10 நாட்களுக்குள் அறிகுறிகள் சரியாகவில்லை என்றால், அது புற்றுநோயாக இருக்கலாம். எனவே புற்றுநோயின் அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரிடம் செல்வது நல்லது.