
காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அனைத்து உடல் செயல்பாடுகளின் சீரான இயக்கத்தில் வெதுவெதுப்பான நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. படுக்கையில் இருந்தே ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடிப்பது எப்படி ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்துகிறது என்பதைப் பற்றி பலருக்கும் தெரியும். ஆனால், தூங்க செல்வதற்கு முன், வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
படுக்கைக்குச் செல்வதற்கு முன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது மற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, சிறந்த தூக்கத்திற்கும் வழிவகுக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இரவில் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கவலை மற்றும் மனச்சோர்வை போக்கும்
உடலில் போதிய தண்ணீர் இல்லாதால் மன அழுத்த நிலைகள் அதிகரித்து மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. இது தூக்க சுழற்சியை எதிர்மறையாக பாதிக்கும். நாளின் முடிவில் சிறிது வெதுவெதுப்பான நீரை பருகுவது உடலின் நீர்மட்டத்தை பராமரிக்கும். மன அழுத்தம், மன சோர்வை நீக்கி மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது.
நச்சுகளை நீக்குகிறது
வெதுவெதுப்பான நீர் உடலின் உட்புற வெப்பநிலையை அதிகரித்து, வியர்வையை உற்பத்தி செய்து, சிறந்த இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. படுக்கைக்கு முன் வெதுவெதுப்பான நீரை உட்கொள்ளும் சிறந்த பழக்கத்தை உட்கொள்வதன் மூலம் சிறந்த தூக்கத்தைப் பெற முடியும்..
இழந்த திரவங்களை நிரப்புகிறது.வியர்வை, சிறுநீர் கழித்தல் மற்றும் குடல் இயக்கம் ஆகியவற்றின் மூலம் நமது உடல் தொடர்ந்து திரவங்களை இழக்கிறது. நம் உடலின் அத்தியாவசிய அமைப்புகளை இரவில் கூட வேலை செய்ய நம் உடலில் இருந்து இழந்த நீரை தண்ணீர் மாற்றுகிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது சூடான நீர் செரிமான மண்டலத்தில் உள்ள தேவையற்ற உணவை கரைத்து, சிறந்த செரிமானத்திற்கு வழிவகுக்கிறது. இரவில் நமது செரிமான அமைப்பு பலவீனமாக இருப்பதால், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது வேகமாகவும் சீராகவும் செரிமானத்திற்கு உதவுகிறது.
நமது செரிமான அமைப்பு இரவில் மெதுவாகவே செயல்படும். ஆனால், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உணவை விரைவாக உடைத்துவிடும். விரைவாக ஜீரணிக்க உதவுகிறது, இதன் விளைவாக விரைவான எடை குறைகிறது.
சூடான தண்ணீர் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை ஊட்டச்சத்து நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். காலை, இரவு என இரண்டு வேளையும் வெதுவெதுப்பான நீரை தொடர்ந்து குடிப்பதால் உங்கள் உடல் நிலை நல்ல மாற்றத்தை கண்கூடாகவே பார்க்க முடியும்.