
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவுடன் தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். ஆனால் தற்போது பிஸியான வாழ்க்கை முறை என்பதால் உடற்பயிற்சி செய்வதற்கு நேரமில்லை. இத்தகைய சூழ்நிலையில், பிசியான நேரத்திலும் உங்களை ஆரோக்கியமாக மாற்ற நீங்கள் விரும்பினால் வாக்கிங் ஒரு சிறந்த வழியாகும். 10,000 படிகள் நடப்பது இன்றைய காலத்தில் ட்ரெண்டாக மாறுவதற்கு இதுவே முக்கிய காரணமாகும். இத்தகைய போக்குகள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. அவற்றை பின்பற்றினால், உடலுக்கு எந்தவித தீங்கும் இல்லை.
உங்களது பிசியான கால அட்டவணையில் உங்களுக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்றால், நீங்கள் குறைந்த பட்சம் நடைபயிற்சி மட்டுமாவது செய்யுங்கள். ஏனெனில், எந்த ஒரு சிறப்பு இயந்திரம் அல்லது உபகரணங்கள் இல்லாமல் செய்யப்படும் இந்த எளிய பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வாரி வழங்கும். ஒருவேளை உங்களுக்கு நடக்க கூட நேரமில்லை என்று நீங்கள் சாக்குபோக்கு சொன்னால், ஒரு நாளைக்கு சுமார் 15 நிமிடம் கூட வாக்கிங் செல்வது உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரும் தெரியுமா? ஆம், தினமும் வெறும் 15 நிமிடம் வாக்கிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: உண்மையில் தொப்பையை குறைக்க 'எது' உதவும் தெரியுமா? வாக்கிங் vs ரன்னிங்?
தினமும் வெறும் 15 நிமிடம் வாக்கிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
1. இதய ஆரோக்கிய மேம்படும்:
உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் மட்டும் நடந்தால் போதும். அதாவது, இப்படி செய்வதன் மூலம் இதைத் துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் நுகர்வு அதிகரிப்பது மட்டுமின்றி, காலப்போக்கில் ரத்த அழுத்தம் மற்றும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். இதனால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து, இதய பிரச்சினைகள் ஏற்படுவது குறையும்.
2. மன அழுத்தம் குறையும்:
உண்மையில், தினமும் வாக்கிங் செல்வது மனதிற்கு அமைதியை கொடுக்கும். அதாவது, நடக்கும் போது உடலில் நடக்கும் செயல்முறையால் மூளையில் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் அதிகரிப்பதால், உங்களது உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன் வெளியிடப்படும். இதனால் உங்களது மன ஆரோக்கியம் மேம்படும். இதற்கு நீங்கள் தினமும் வெறும் 15 நிமிடங்கள் மட்டும் நடந்தால் போதும். இதனால் மனசோர்வு, பதட்டம் மற்றும் மன அழுத்தம் குறைய ஆரம்பிக்கும்.
3. தசை எலும்புகள் வலுவாகும்:
தினமும் 15 நிமிடம் நடைபயிற்சி செய்தால் எலும்புகள் வலுவாக இருக்க உதவுகிறது. பொதுவாக வயது ஆக ஆக எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபடுவது மிகவும் அவசியம். இதற்கு தினமும் நடைபயிற்சி செய்தால் எலும்புகள் பலவீனமாகும் அபாயம் தடுக்கப்படுகிறது. தினமும் வெறும் 15 நிமிடங்கள் நடந்தால் எலும்பு அடர்த்தி மற்றும் தசை வலிமையாகும்.
4. மூளை ஆரோக்கிய மேம்படும்:
தினமும் நடைப்பயிற்சி செய்தால் மூளை ஆரோக்கியம் மேம்படும். அதாவது நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மூளையின் அறிவாற்றல் தூண்டப்படும். வாக்கிங் அறிவாற்றல் மற்றும் நரம்பியல் செயல்பாடு ஆகியவற்றிற்கு இடையேயான இணைப்பை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. எனவே, தினமும் 15 நிமிடம் வாக்கிங் சென்றால், மூளையின் அறிவாற்றல் அதிகரிக்கும்.
5. நீரிழிவு நோய் அபாயம் குறையும்:
ஆய்வுகளில், தினமும் 15 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தால் நீரிழிவு நோயின் அபாயம் குறைவதாக கண்டுபிடித்துள்ளனர். அது தவிர, சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய வயிற்றுக் கொழுப்பை குறைக்கவும் வாக்கிங் சிறந்தது என்றும் கூறுகின்றனர்.
பிற நன்மைகள்:
- தினமும் 15 நிமிடம் வாக்கிங் சென்றால் உடலில் இருக்கும் கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
- 15 நிமிடம் நடப்பது தூக்கமின்மை பிரச்சனையை நீக்கி, நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
- நடைபயிற்சி செய்வதால் முதியவர்கள் கரோனி தமனி நோயிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
- தினமும் வெறும் 15 நிமிடம் நடந்தால் புற்றுநோய் அபாயத்தை சுலபமாக குறித்து விடலாம்.
இதையும் படிங்க: பிபி கட்டுக்குள் வருவதற்கு எத்தனை நிமிஷம் 'வாக்கிங்' போகனும் தெரியுமா?