அட! தண்ணீர் தொட்டியை இவ்வளவு சுலபமாக சுத்தம் செய்யலாமா?; இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

Published : Dec 15, 2024, 11:58 AM ISTUpdated : Dec 15, 2024, 11:59 AM IST

வீடுகளில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது என்பது பெரும் தலைவலியாகும். இந்த செய்தியில் சுலபமாக தொட்டியை சுத்தம் செய்வது எப்படி? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

PREV
14
அட! தண்ணீர் தொட்டியை இவ்வளவு சுலபமாக சுத்தம் செய்யலாமா?; இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
Water Tank Cleaning

இப்போது அனைத்து வீடுகளிலும் தண்ணீர் தொட்டி உள்ளது. வீட்டின் அமைப்பைப் பொறுத்து சில வீடுகளில் இரண்டு அல்லது மூன்று தண்ணீர் தொட்டிகள் கூட உள்ளன. இந்த தொட்டியில் உள்ள தண்ணீரை தான் நாம் குடிப்பதற்கும் பயன்படுத்துகிறோம். ஆகவே தண்ணீர் தொட்டிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். 

ஆனால் அந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது என்பது மிகப்பெரும் வேலையாகும். ஏனெனில் தொட்டியை சுத்தம் செய்ய நிச்சயமாக நிறைய நேரம் எடுக்கும். தொட்டியின் உள்ளே நுழைந்து முழு தொட்டியையும் சுத்தம் செய்ய இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகும். அதனால்தான் பெரும்பாலான மக்கள் வருடத்திற்கு ஒரு முறை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்கிறார்கள். 
 

24
How to clean Water Tank

தண்ணீர் தொட்டியை தொடர்ந்து சுத்தம் செய்யாமல் இருந்தால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுவது உறுதி. தண்ணீர் தொட்டியை குறைந்தது ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் அந்த நீரில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் உருவாகும். அந்த நீரைப் பயன்படுத்துவதால் நோய்கள் உருவாகும்.

கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்கு மதிப்பு கூடணுமா? இந்த ஐடியா ட்ரை பண்ணி பாருங்க!

34
Water Tank Clean

தண்ணீர் தொட்டியை உள்ளே இறங்காமலேயே எளிதாக சுத்தம் செய்யலாம். என்னப்பா சொல்ற தொட்டியின் உள்ளே இறங்காமல் எப்படி சுத்தம் செய்ய முடியும்? என நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது. அது என்ன என்பது குறித்து இப்போது காண்போம். தண்ணீர் தொட்டிகளை காலி செய்த பின் வெதுவெதுப்பான நீரில் சிறிது டிடர்ஜென்ட் பவுடர், டெட்டால், பேக்கிங் சோடா சேர்த்து கலந்து தண்ணீர் தொட்டியில் வைக்கவும். 

44
Water Tank Cleaning Method

பின்னர் ஒரு நீண்ட துடைப்பான் குச்சி அல்லது குச்சி விளக்குமாறு கொண்டு முழு தொட்டியையும் நன்றாக தேய்க்கவும். அதன் பிறகு முழு தொட்டியையும் தண்ணீரில் சுத்தம் செய்யலாம். வெந்நீர் அழுக்குகளை விரைவாக வெளியேறச் செய்யும். ஆகையால் வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டும் தொட்டியை முழுமையாக சுத்தம் செய்யலாம்.

2024 ஆண்டின் டாப் 10 இந்திய கடற்கரைகள்! தமிழ்நாட்டின் இந்த கடற்கரைகளும் லிஸ்டுல இருக்கு!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories