AirAsia: திருச்சி டூ பாங்காக் வெறும் 4,000 ரூபாய்தான்! ஏர் ஏசியாவின் ஜீரோ பேஸ் ஃபேர் ஆஃபர்!

First Published | Dec 14, 2024, 5:08 PM IST

திருச்சியில் இருந்து தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் வரை விமானத்தில் செல்ல நம்பமுடியாத ஆஃபரை ஏர் ஏசியா நிறுவனம் வழங்குகிறது. மிகக் குறைந்த செலவில் திருச்சியில் இருந்து பாங்காக் செல்ல முடியும். அது எப்படி?

AirAsia Trichy Bangkok Flight

தாய்லாந்தைச் சேர்ந்த விமான நிறுவனமான ஏர் ஏசியா (AirAsia) திருச்சியில் இருந்து பாங்காக் செல்லும் விமானப் பயணிகளுக்கு அடிப்படை டிக்கெட் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் மிகவும் குறைவான செலவில் தாய்லாந்து நாட்டுக்குச் செல்ல முடியும்.

Trichy Srirangam

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்தின் தலைநகரான பாங்காங் வரை ஏர் ஏசியா நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம்தான் இந்த வழித்தடத்தில் நேரடி விமான சேவையை ஏர் ஏசியா தொடங்கியது. இந்நிலையில், பயணிகளைக் கவர மிகவும் கவர்ச்சிகரமான சலுகையை அறிவித்துள்ளது.


Tiruchirappalli International Airport

இந்தச் சலுகை Zero Base Fare என்று அழைக்கப்படுகிறது. வழக்கமாக திருச்சியில் இருந்து பாங்காக் செல்ல விமானம் டிக்கெட்டின் அடிப்படை கட்டணம் ஒரு நபருக்கு ரூ.25,000 வரை ஆகும். ஆனால், இப்போது ஏர் ஏசியா இந்தக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்து இதர வரிகளை மட்டும் செலுத்திவிட்டு பயணிக்க அனுமதிக்கிறது.

AirAsia Flight Offer to Bangkok

வெளிநாட்டுப் பயணத்தை விரும்பும் சுற்றுலா பிரியர்கள் ஏர் ஏசியாவின் இந்த Zero Base Fare சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம். டிக்கெட் கட்டணம் இல்லாமல், விமான நிலைய வரி, எரிபொருள் வரி மற்றும் இதர சிறிய கட்டணங்களை மட்டும் செலுத்தினால் ஏர் ஏசியாவின் பாங்காக் விமானத்தில் டிக்கெட் கிடைத்துவிடும்.

AirAsia Zero Base Fare Offer

ஏர் ஏசியா இந்தச் சலுகையை எப்போதும் வழங்குவது இல்லை. குறிப்பிட்ட சில நாள்களில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்தச் சலுகை கிடைக்கும். ஏர் ஏசியாவின் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் புக் செய்யும்போது இந்த ஆஃபரைப் பெறலாம்.

Tiruchirappalli to Bangkok Flight AirAsia Offer

ஏர் ஏசியா திருச்சியில் இருந்து பாங்காங்கிற்கு நேரடி விமான சேவையை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்குகிறது. செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் பாங்காக்-திருச்சி-பாங்காக் விமானங்களில் பயணிக்கலாம்.

இந்த விமானம் பாங்காக்கில் உள்ள டான் முயாங் சர்வதேச விமான நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு புறப்படும். (உள்ளூர் நேரம்) மற்றும் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை இரவு 10.35 மணிக்கு வந்தடையும். (உள்ளூர் நேரம்). திருச்சி விமான நிலையத்தில் இருந்து இரவு 11.05 மணிக்கு புறப்படும். (உள்ளூர் நேரம்) மற்றும் பாங்காக்கை அதிகாலை 04.15 மணிக்கு சென்றடையும் (உள்ளூர் நேரம்)

Latest Videos

click me!