நாம் எந்த சமையல் செய்தாலும் அதில் உப்பை தவிர்க்க முடியாது. சில இனிப்பு பண்டங்களில் கூட சிறிதளவு உப்பு போடுவார்கள். உப்பினை சமையலறையின் ஹீரோ என்றே சொல்லலாம். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது அத்தனை உண்மையான வார்த்தைகள். உப்பு சுவையை தரும் என்பதை தாண்டி நமது ஆரோக்கியத்திற்கும் தேவையானது. உப்பு என்ற கனிமம் ஒரு சோடியம் குளோரைடிலிருந்து கிடைக்கிறது. சோடியம், குளோரைடு என்ற இருவேதிபொருள்களும் தனித்தனியாக வெவ்வேறு தன்மை உடையவை. அதை நாம் உணவுக்கு பயன்படுத்த முடியாது. அதை சோடியம் குளோரைடாயாக மாற்றும்போதே உணவுக்கு பயன்படுகிறது.
24
Salt nutrition facts in tamil
ஆனால் நம்முடைய சமையலறையில் வைத்திருக்கும் பிற பொருள்களை போல உப்புக்கும் காலாவதி தேதி உள்ளதா? என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. மசாலா பொருள்கள், காய்கறிகள், பருப்பு உள்ளிட்ட எல்லா பொருள்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கெட்டுப் போய்விடும். அதன் பிறகு அதனை பயன்படுத்த முடியாது. ஆனால் உப்பு கெட்டுப் போவதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அதற்கு காலவதி தேதி உள்ளது இருக்கிறதா இல்லையா என்பது கூட பலருக்கும் தெரியாது. இந்த பதிவில் உப்பின் காலாவதி தேதி குறித்தும் அதன் சுவாரசியமான உண்மைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
நாம் உணவில் சேர்க்கும் உப்பில் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. இது தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் டி ஆகிய சத்துக்களும் உள்ளன. முன்பே சொன்னது போல உப்பு சோடியம் குளோரைடால் ஆனதாகும். இதனுடைய வேதியல் பண்புகள் மாறாதவை. இதன் காரணமாக உப்பு எப்போதும் கெட்டுப் போவதில்லை. இதற்கு காலாவதி தேதி என்ற ஒன்றே கிடையாது. உப்பில் உள்ள சிறப்பே அது பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளை வளரவிடாது. பாக்டீரியாக்கள் உருவாக ஈரப்பதம் தேவை. தூய்மையான உப்பில் தண்ணீர் இருக்காது. இதுதான் உப்பு கெடாமல் இருப்பதற்கான காரணமாகும்.
நுண்ணுயிரிகளுக்கு எதிரான ஆற்றல் உப்பில் உள்ளது. இதுதான் உப்பு கெடாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாகும். அமெரிக்க வேளாண்மைத் துறை வெளியிட்ட தகவல்கள்படி, தூய்மையான உப்பு எப்போதும் கெடுவதில்லை. கடலில் இருந்து தயார் செய்யப்பட்ட உப்பில் கொஞ்சம் கடல் பாசி இருக்க வாய்ப்புள்ளது. உப்பு ஈரப்பதமாகும்போது கட்டிகளாக மாறும். இப்படி மாறிய உப்பை மூன்று ஆண்டுகள் உபயோகிக்கலாம். உப்பு எப்படியிருந்தாலும் சமையலில் சேர்க்கலாம். பாதிப்புகள் வருவதில்லை.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.