பூசணி மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு சூப்பர் காய்கறி ஆகும். லேசான இனிப்பு சுவையுடன் இருக்கும் இந்த பூசணிக்காய் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியம் நிறைந்ததும் கூட. அது போல தான் அதன் விதைகளும். ஆம், பூசணி விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. உங்களுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் வறுத்த பூசணி விதைகளை சாப்பிடுங்கள். அப்படி சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக பெண்கள் தினமும் 10 பூசணி விதையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும். அது ஏன் என்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
27
டைப் 2 சர்க்கரை நோய்
தற்போது டைப் 2 சர்க்கரை நோயால் பெண்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதுவும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் தான். மஞ்சள் பூசணி டைப் 2 சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மையை கொண்டிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றன. எனவே பெண்கள் மஞ்சள் பூசணி விதைகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
37
எலும்புகளை வலுப்படுத்தும்
வயது ஆக ஆக எலும்பு பலவீனமாகும். குறிப்பாக 40 வயது கடந்த பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே இருக்கும். பூசணி விதைகளில் இருக்கும் அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் சி உடலில் கால்சியத்தை அதிகமாக உறிஞ்ச உதவுகிறது. இதனால் எலும்புகள் ஆரோக்கியம் மேம்படும். எனவே பெண்கள் தினமும் பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவாக இருக்கும்.
பூசணி விதையில் இருக்கும் மெக்னீசியம் உடலில் இருக்கும் மெக்னீசியத்தின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் அவற்றில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, நரம்பு மண்டலத்தை அமைதி அடைய செய்யும். இதனால் உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும்.
57
சிறுநீர் தொற்று
பூசணி விதையில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டிஆக்சிடன்ட்கள் உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைக்கும். மேலும் சிறுநீர் பாதை தொற்றையும் சரி செய்யும். கோடை காலத்தில் பூசணி விதைகளை உன் அதிகமாக எடுத்துக் கொள்வது ரொம்பவே நல்லது.
67
பிசிஓஎஸ்
பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பிசிஓஎஸ். கர்ப்பப்பையில் இருக்கும் சினைப்பையில் உருவாகும் நீர்கட்டி தான் இது. இந்த பிரச்சனையால் பெண்களுக்கு தைராய்டு, உடல் பருமன், குழந்தை பெற்றுக் கொள்ளாமல் போகுதல் ஆகியவை ஏற்படும். எனவே இந்தப் பிரச்சனை உள்ள பெண்கள் தங்களது உணவில் பூசணி விதையை சேர்த்துக் கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.
77
கொலஸ்ட்ராலை குறைக்க
பூசணி விதைகள் உடலில் தேவையான கொழுப்பு அமிலங்களின் செயல்பாட்டை ஊக்குவித்து, உடலில் இருந்து கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.