
நீங்கள் நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறீர்களா? அல்லது அடிக்கடி தலை சுற்றல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? ஆம் என்றால், உங்களது உடலில் ஹீமோகுளோபின் கம்மியாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி தான் இது. ஹீமோகுளோபின் என்பது ரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு சூப்பர் ஹீரோ. இது முழு உடலுக்கு மாறுங்க வேலை செய்கிறது. மேலும் இது உடலை ஆரோக்கியமாகவும் மற்றும் சுறுசுறுப்பாகவும் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது நல்ல செய்தி என்னவென்றால், உணவில் சில சிறப்பு சைவ உணவுகளை சேர்ப்பதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். சிறப்பு என்னவென்றால் அந்த உணவுகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், இரும்புச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாலும் நிறைந்துள்ளன. இந்த பதிவில் ஹீமோகுளோபினை விரைவாக அதிகரிக்கும் அத்தகைய 5 சூப்பர் ஃபுட்களை பற்றி பார்க்கலாம்.
இயற்கை நமக்கு வரமாக தந்த சூப்பரான காய்கறி தான் பீட்ரூட். பெரும்பாலும் இதை இயற்கையான இரத்த உக்கி என்றும் சொல்லுவார்கள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன இவை அனைத்தும் இரத்த சிவப்பணுக்கள் உருவாகுவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன எனவே இதை நீங்கள் சாலட், ஜூஸ் அல்லது காய்கறியாக சாப்பிடலாம். தினமும் பீட்ரூட் சாறு குடித்து வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும்.
மாதுளை இரத்தத்தை அதிகரிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் ஒரு அற்புத பழமாகும். இது இரும்புசத்து, வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜன் ஏசுகளின் களஞ்சியம். வைட்டமின் சி அல்லது உடலில் இரும்பு சட்டை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. எனவே தினமும் ஒரு மாதுளை பழம் சாப்பிட்டு வந்தாலும் அல்லது அதன் சாற்றை குடித்து வந்தாலோ இரத்த குறைப்பாட்டை விரைவாக நீக்கி உடலுக்கு புது சக்தி கிடைக்கும்.
கொண்டைக்கடலை, ராஜ்மா, சன்னா ஆகியவை புரதத்தில் நல்ல மூலமாக சிறந்த மூலமாகவும் கருதப்படுகிறது. நீங்கள் சைவ உணவு சாப்பிடும் நபராக இருந்தால் உங்களது உணவில் இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்ய இவை சிறந்த தேர்வாகும். இவற்றை நீங்கள் சாலட் அல்லது காய்கறியாக சாப்பிடுவது உங்கள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
பாதாம், பூசணி விதைகள், எள், பேரிச்சபழம், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்பு, தாமிரம் மற்றும் வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை அனைத்தும் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றன. தினமும் ஒரு கைப்பிடி வறுத்த பூசணி விதைகள், ஊற வைத்த பாதாம், பேரிச்சம்பழம், உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் உங்களது உடலில் இரும்புச்சத்து அளவு கணிசமாக அதிகரிக்கும். மேலும் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவும்.
சிவப்பு தண்டு கீரை இரும்புசத்தின் சிறந்த மூலமாகும். இதில் வைட்டமின் ஏ வைட்டமின் சி போலெட் ஆகியவே உள்ளன அவை ரத்தத்தை உருவாக்குவதற்கு பெரிதும் உதவுகின்றன. எனவே இதை நீங்கள் இதை பருப்பு அல்லது காய்கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.
- இரும்புச்சத்து நிறைந்த இந்த உணவுகளுடன் வைட்டமின் சி ( ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்றவை) நிறைந்த உணவுகளையும் சாப்பிடுங்கள். அவை உங்கள் உடல் இரும்பை உறிஞ்ச உதவும்.
- உங்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு தீவிரமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.