ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள் ஆரோக்கியமான உடல் எடையுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆன பிறகும் சரியான வளர்ச்சி மற்றும் உடல் எடை இல்லை என்று நிறைய பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள். இதற்காக அவர்கள் மருத்துவரை அணுகி சத்தான டானிக் வாங்கிக் கொடுக்கிறார்கள். ஆனால் அது குழந்தையின் எடையை அதிகரிப்பதற்கு வாய்ப்பு ரொம்பவே கம்மி. குழந்தையின் எடையை அதிகரிக்க அதுவும் ஆரோக்கியமான முறையில் என்றால் உணவு முறையை தவிர வேறு எதுவும் பலன் தராது என்றே சொல்லலாம். இப்போது குழந்தையின் எடையை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
25
நெய்
ஆறு மாதம் கடந்த பிறகு தான் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு எளிதில் ஜீரணிக்க கூடிய உணவை தான் கொடுக்க வேண்டும். குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு நீங்கள் அவர்களுக்கு இட்லி, தோசை கொடுக்கலாம். இட்லி கொடுக்கும் போது அதனுடன் சிறிது நெய் சேர்த்து கொடுங்கள். ஜீரணத்தை எளிதாக்கும். மேலும் வயிற்றை நிரப்பும்.
35
வாழைப்பழம்
வாழைப்பழம் குழந்தைகளின் எடையை எளிதில் அதிகரிக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் எடையை அதிகரிக்கவும், செரிமான அமைப்பில் சீராக செயல்படவும் உதவுகிறது. இவை உண்பதற்கு எளிதாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
முட்டையில் ஏராளமான சத்துக்கள் இருப்பதால் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க இது பெரிதும் உதவுகிறது. ஆனால் அவித்த முட்டை தான் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். அது குழந்தையின் உடல் எடையை நிலையாக வைக்கவும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.
55
காய்கறிகள் மற்றும் பருப்புகள்
பருப்பு, அரிசி, அதனுடன் சில காய்கறிகளை சேர்த்து குக்கரில் நன்கு வேக வைத்து அதனுடன் சிறிது நெய் சேர்த்து மசித்து குழந்தைகளுக்கு கொடுங்கள். இது குழந்தைகளின் எடையை படிப்படியாக அதிகரிக்க உதவுகிறது. மேலும் பசியையும் அதிகரிக்கும்.