
வெளிநாட்டுக்கு பயணம் செல்வது பலருக்கும் கனவாக இருக்கும். ஆனால் வெளிநாட்டிற்கு செல்ல நிறைய செலவாகும், அங்கு சென்ற பின் செலவு அதிகம் இருக்கும் என நினைத்து பலர் அதை திட்டமிடவே தயங்குவார்கள். ஆனால் சில நாடுகளுக்கு நீங்கள் செல்லும் போது நீங்கள் கொண்டு செல்ல ஆயிரம் ரூபாய் கூட உங்களை கோடீஸ்வரராக மாற்றும் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்திய ரூபாயில் வெறும் ஆயிரம் ரூபாய் கூட உங்களுடைய மதிப்பை உயர்த்தும். உங்களை கோடீஸ்வரராக உணர வைக்கும் நாடுகளை குறித்து இங்கு காண்போம்.
வியட்நாமில் உள்ள பணத்தை டோங் என்கிறார்கள். இது மிகவும் மலிவான நாணயங்களில் ஒன்றாகும். இந்த நாட்டில் 1 இந்திய ரூபாய்க்கு சுமார் 300 வியட்நாமிய டோங்குகள் சமாமாகும். யோசித்து பாருங்கள்! நீங்கள் இந்த நாட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொண்டு போனால் கூட கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் உங்களிடம் இருக்கும். பணக்காரர் போல அங்கு வாழ முடியும். அந்த நாட்டின் அரசாங்கம் ஏற்றுமதியை அதிகரிக்க நாணய மதிப்பைக் குறைவாக வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்திய பயணிகள் வியட்நாம் சென்றால் யோசிக்காமல் செலவு செய்து ஜாலியாக இருக்கலாம்.
இந்தோனேசிய நாட்டில் உள்ள ரூபாய், நம் இந்திய ரூபாயை விடவும் மதிப்பு குறைந்தது. இந்த நாட்டில் இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் கூட சுமார் 185 முதல் 190 ரூபாய் வரை வரும். இந்த நாட்டு பொருளாதாரம் பலவீனமாக இல்லை. ஆனால் நாணயத்தின் குறைந்த மதிப்பு இந்திய பயணிகளுக்கு சாதகமாக அமைகிறது. ஒருவேளை ஊரில் இருந்து நீங்கள் ரூ. 5 ஆயிரம் கொண்டு சென்றால் சுமார் 9 லட்சம் ரூபாய் உங்களிடம் இருக்கும். ஒரு லட்சாதிபதியாக வலம் வரலாம்.
ஈரானிய பணம், ரியால் ஆகும். இது உலகின் மதிப்பு குறைந்த நாணயங்களில் ஒன்றுதான். இந்த நாட்டில் இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் கூட சுமார் 490 முதல் 500 ரியால் மதிப்பு கொண்டது. வெறும் ரூ. 10 ஆயிரம் ஈரானுக்கு கொண்டு சென்றால், அங்கு உங்களிடம் சுமார் 5 மில்லியன் ரியால் இருக்கும்.
லாவோஸ் நாணயம் கிப். இதற்கும் அதிக மதிப்பு கிடையாது. இந்த நாட்டில் இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் 250 முதல் 260 கிப் வரை இருக்கும். இந்த குட்டி நாடு இந்திய சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். நீங்கள் இந்திய மதிப்பில் ரூ.5 ஆயிரம் கொண்டு சென்றாலும் உங்களிடம் ரூ12.5 லட்சம் இருக்கும்.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கினியாவில், இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் சுமார் 100 கினியன் பிராங்குகளுக்கு ஈடாகும். இந்த நாட்டில் இரும்பு, பாக்சைட் ஆகிய கனிம வளங்கள் இருந்தாலும் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை. இதனால் இந்நாட்டின் நாணயத்தின் மதிப்பு பலவீனமாக உள்ளது. இங்கு வெறும் 10 ஆயிரம் ரூபாய் கொண்டு சென்றாலும் அது ரூ.10 லட்சத்திற்கு சமம். மகிழ்ச்சியாக ஆப்பிரிக்க கலாச்சாரம், வனவிலங்குகளை கண்டு ரசித்துவிட்டு வரலாம்.