Foot Fungus : கால்ல சேற்றுப்புண் வருதா? விரைவில் குணமாக்கும் வீட்டு வைத்தியங்கள்

Published : Sep 04, 2025, 03:14 PM IST

மழைக்காலத்தில் காலில் வரும் சேற்றுப்புண், பூஞ்சை தொற்றை சரி செய்ய உதவும் சில வீட்டு வைத்தியங்கள் இங்கே.

PREV
16
Home Remedies for Foot Fungal Infections

மழைக்காலத்தில் மழைநீரில் தேங்கியிருக்கும் கிருமிகள் காரணமாக கால் விரல்கள், நகங்களில் பூஞ்சை தொற்றுகள், சேற்றுப் புண்கள் வரும். இதனால் காலில் செருப்பு அணியவோ, நடக்கவோ மிகவும் சிரமமாக இருக்கும். அதை சரி செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியவில்லையா? இனி அது குறித்து கவலைப்பட வேண்டாம். இதோ நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே மழையால் கால்களில் வரும் சேற்றுப் புண், பூஞ்சை தொற்றை சுலபமாக சரி செய்து விடலாம். அது எப்படி என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

26
மஞ்சள் கிழங்கு

மஞ்சளில் நிறைய ஆண்ட்டி பாக்டரியல் பண்புகள் இருக்கிறது. கடைகளில் வாங்கும் மஞ்சள் பொடியில் நிறைய கலப்படம் இருப்பதால் நீங்கள் ஃபிரெஷ்ஷான மஞ்சள் கிழங்கு வாங்கி பயன்படுத்துங்கள். இப்போது சேற்றுப்புண் உள்ள இடத்தை வெந்நீரால் நன்கு சுத்தம் செய்து பிறகு மஞ்சள் கிழங்கு உரசி அந்த பேஸ்ட்டை அந்த இடத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு பிறகு காலையில் சூடான நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் விரைவில் குணமாகும்.

36
எலுமிச்சை சாறு ;

எலுமிச்சை சாரில் ஆன்ட்டி பாக்டரியல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இவை கால்கள் ஏற்படும் எரிச்சல், அரிப்பு குறைக்க உதவுகிறது. இதற்கு எலுமிச்சை சாறுடன் கிளிசரின் சேர்த்து நன்கு கலந்து அந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து சூடான நீரில் கழுவவும்.

46
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா பண்புகள் அதிகமாக உள்ளதால் அவை மழை காலத்தில் ஏற்படும் பூஞ்சை, பாக்டீரியா தொற்றுக்களை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. இதற்கு தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடுப்படுத்தி பிறகு கை விரல்களால் தொட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளை செய்து விடவும். தினமும் தூங்குமும் இப்படி செய்து வந்தால் சில நாட்களிலே சேற்றுப்புண், பூஞ்சை தொற்றுகள் சரியாகிவிடும்.

56
பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவில் இருக்கும் பண்புகள் கால்களில் ஏற்பட்டிருக்கும் பூஞ்சை தொற்றை சரி செய்ய உதவுகிறது. இதற்கு ஒரு பெரிய டப்பாவில் கால் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பின் அதில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து உங்களது கால்களை அந்த தண்ணீரில் சுமார் 20 நிமிடங்கள் வைக்கவும். தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களிலே நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

66
டீ ட்ரீ ஆயில்

இந்த எண்ணெயில் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் ஆன்டி பாக்டரியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றது. இவை கால்களில் ஏற்பட்டிருக்கும் சேற்றுப்புண், பூஞ்சைகள் சரி செய்ய உதவுகிறது. இதற்கு சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலுடன் இந்த டீ ட்ரீ ஆயில் சேர்த்து நன்கு கலந்து அதை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும். ஒரு நாளைக்கு காலை, இரவு என இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல மாற்றாம் காண்பீர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories