- நீண்ட பயணத்தின் போது முளைகட்டிய தானியங்கள், சாலட்கள் எடுத்துச் செல்வதை பெற்றோர்கள் தவிர்க்கவும். அவற்றைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் அது அவர்களுக்கு தொற்றை ஏற்படுத்தும், விஷமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே இது போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு ஒருபோதும் கொடுக்கக் கூடாது.
- பயணத்திற்கு முன் குழந்தைகளுக்கு சிக்கன், மட்டன், மீன் போன்ற காரமான உணவுகளை சாப்பிட கொடுக்க வேண்டாம். அது அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
- தயிர், சீஸ் போன்ற பால் பொருட்களை நீண்ட நேரம் வெளியில் வைத்திருந்தால் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் பாக்டீரியாக்களும் வளரும். அந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கிற்கு வழிவகுக்கும். எனவே இந்த மாதிரியான உணவுகளையும் பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டாம்.
என்ன கொடுக்க வேண்டும்?
பயணத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உணவு லேசானதாகவும், புதிதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்காக, பெற்றோர்கள் பயணத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட கிச்சடி போன்ற உணவுகள், ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்களைத் தேர்வு செய்யலாம்.