Biryani ilai: உடல் எடையை ஈஸியாக குறைக்கும்...பிரியாணி இலையின் மகத்துவம் தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க

First Published | Jul 14, 2022, 10:19 AM IST

Health Benefits- Bay Leaf: நம் முன்னோர்கள் சமையலில் மருத்துவ குணங்கள் நிறைந்த பல்வேறு உணவு பொருள்களை தான் பயன்படுத்தி வந்தார்கள். அவற்றில் முக்கியமான உணவு பொருள் பிரியாணி இலை, இது உடலுக்கு நன்மை அளிப்பதோடு, ஏராளமான மருத்துவ குணங்களும் கொண்டுள்ளது. 

Health Benefits- Bay Leaf:

பிரியாணி இலை, மூலிகை சுவை காரணமாக சூப்கள் மற்றும் பிரியாணி போன்ற இறைச்சி உணவுகளை சுவைக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள் ஆகும். இது  உலகெங்கிலும் உள்ள மளிகைக் கடைகளில்  தூள் அல்லது புதிய இலையாக விற்கப்படுகிறது, ஆனால் இதன் உலர்ந்த,காய்ந்த இலை அதிக அளவு பயன்படுத்த பட்டு வருகிறது. சுவை மற்றும் ஊட்டச்சத்து காரணமாக பிரியாணி இலைகள் பொதுவாக, கரீபியன் முதல் இந்தியா வரை எல்லா இடங்களிலும் வளர்க்கப்படுகிறது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், வாசனை திரவம் தயாரிக்கவும் இந்த இலைகள் பயன்படுகின்றன.

Health Benefits- Bay Leaf:

பிரியாணி இலையை நீங்கள் உணவில் சேர்க்கும் போது, உங்களுக்கு நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் அளவை அதிகரிக்கிறது.
மேலும், பிரியாணி இலையினை உணவில் சேர்க்கும் போது ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பின்வருமாறு:

 மேலும் படிக்க ....Cold, cough: எங்கு பார்த்தாலும் பரவி இருக்கும் சளி, இருமல் பிரச்சனை..தப்பிப்பது எப்படி? ஈஸியான எளிய வழிமுறைகள்

Tap to resize

Health Benefits- Bay Leaf:

உடல் எடையை குறைக்க:

சமீப காலமாக உடல் எடை குறைக்க விரும்பும், மக்கள் அதிக அளவில் பிரியாணி இலையின் தேநீரை குடித்து வருகிறார்கள். நீங்களும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் உடல் பயிற்சி மட்டும் போதாது அத்துடன், ஆரோக்கியமான உணவு பொருட்களும் அவசியம்.  

முதலில், ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வேண்டும்.

இதில்  2 முதல் மூன்று பிரியாணி இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 2 நிமிடங்கள்  சென்ற பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும். பின் அந்த நீரை வடிகட்டி ஆற விடுங்கள். கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும்போது, தேவைப்பட்டால் சிறிது தேன் சேர்த்து டீ போலவும் பருகலாம்.

Health Benefits- Bay Leaf:

செரிமான பிரச்சனை:

பிரியாணி இலை தேநீர் வயிற்று வலியை குணப்படுத்தும். இந்த தேநீர் மிகவும் சைனஸ் அழுத்தம் அல்லது மூக்கில் அடைப்பில் இருந்து விடுபட உதவும். அதுமட்டுமின்று, பிரியாணி இலை செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. 

 மேலும் படிக்க ....Cold, cough: எங்கு பார்த்தாலும் பரவி இருக்கும் சளி, இருமல் பிரச்சனை..தப்பிப்பது எப்படி? ஈஸியான எளிய வழிமுறைகள்

Health Benefits- Bay Leaf:

சர்க்கரை நோய்:

பிரியாணி இலை டைப்-2 நீரிழிவிற்கு நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரித்து வருகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நீரில் பட்டையை சேர்த்து கொதிக்க வைத்து குடித்துவரலாம். எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை அன்றாடம் உணவில் சேர்த்து வருவது நல்லது. வாரம் இரண்டு முறையாவது சேர்க்கலாம். மேலும், இதய நோய்க்கான ஆபத்தை குறைக்க உதவும். 

 நோயெதிர்ப்பு பிரச்சனை:

பிரியாணி இலை வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளது. இந்த வைட்டமின்கள் அனைத்தும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை உட்கொள்வது அவசியம்.

 மேலும் படிக்க ....Cold, cough: எங்கு பார்த்தாலும் பரவி இருக்கும் சளி, இருமல் பிரச்சனை..தப்பிப்பது எப்படி? ஈஸியான எளிய வழிமுறைகள்

Latest Videos

click me!