Asparagus: மலட்டு தன்மை பிரச்சனையா..? தண்ணீர் முட்டான் கிழங்கின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள்...

First Published Jul 2, 2022, 2:25 PM IST

Asparagus benefits: மலட்டு தன்மை பிரச்சனையை போக்கும் தண்ணீர் விட்டான் கிழங்கின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

Asparagus benefits

தண்ணீர் முட்டான் கிழங்கு வியக்க வைக்கும் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட மித வெப்ப மண்டல பகுதிகளைச் சார்ந்தது.இரண்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய இந்த தாவரம் இந்தியாவின் அணைத்து பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது.

பலவிதமான சிறுநீரக கோளாறுகள், மஞ்சள் காமாலை மற்றும் மூட்டுவலி, நரம்பு மண்டல பிரச்சனை, தாய்ப்பால் நல்லா சுரக்க உதவும், ஆண்மை அதிகரிப்பு உள்ளிட்ட நோய்களை சீர்படுத்தவும் உதவுகிறது.  

மேலும் படிக்க...Aishwarya: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓப்பனாக சொன்ன ஹெல்த் சீக்ரெட்...இதெல்லாம் ட்ரை பண்ணுங்கோ..அப்பறம் பாருங்க

Asparagus benefits:

 நீரிழிவு:

தண்ணீர் விட்டான் கிழங்கை நல்லா கழுவி உலர்த்தி பொடியாக்கி, அந்த பொடியை  தினமும் ரெண்டு வேளை சாப்பிட்டு வந்தா நீரிழிவு நோய் குணமாகும். காய்ச்சல் இருந்தால், இ டீஸ்புன் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியுடன், சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50 கிராம் எடுத்துப் பொடி செஞ்சு, தினமும் ரெண்டு வேளை சாப்பிட்டால் காய்ச்சல் பறந்து போகும். 

Asparagus benefits:

சிறுநீர் கோளாறு:

 சிறுநீர் நோய்களை குணமாக்கும் இத்தாவரம் சிறுநீர் போக்கினை தூண்டும். பலவிதமான சிறுநீர் கோளாறுகள் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகளை குணப்படுத்த உதவுகிறது. மூட்டுக்களில் சேரும் கழிவுப் பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்றி கீழ் வாதத்தினைத் தீர்க்கும். 

மேலும் படிக்க...Aishwarya: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓப்பனாக சொன்ன ஹெல்த் சீக்ரெட்...இதெல்லாம் ட்ரை பண்ணுங்கோ..அப்பறம் பாருங்க

Asparagus benefits:

மலட்டுத்தன்மை:

மலட்டுத்தன்மை போக்கும் இத்தாவரத்தில் இருந்து பல வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தண்ணீர் விட்டான் கிழங்கை உலர்த்தி பொடியாக்கி,  வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் ரெண்டு வேளை ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பிரச்சனை தீரும். அதுமட்டுமின்றி, இத்தாவரத்தின் சாறுடன் மிளகு,தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து பால் உணர்வு தூண்டும் வலுவேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

Asparagus benefits:

நரம்பு தொடர்பான நோய்:

தண்ணீர் விட்டான் கிழங்கை கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள், மூட்டுவலி, கழுத்து சுளுக்கு, நரம்பு மண்டல நோய்களை நீக்க பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, குடல்வலி,வயிற்றுப்போக்கு மற்றும் பசியின்மை போன்றவற்றை போக்கவும் பயன்படுகிறது.  

மேலும் படிக்க...Aishwarya: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓப்பனாக சொன்ன ஹெல்த் சீக்ரெட்...இதெல்லாம் ட்ரை பண்ணுங்கோ..அப்பறம் பாருங்க

click me!