தனுஷ் கோலிவுட்,டோலிவுட், ஹாலிவுட் என தெறிக்கவிட்டு வருகிறார். தனுஷ் நடிப்பில் தற்போது திருச்சிற்றம் படம் ரிலீசாக இருக்கிறது. அதேபோன்று, ஐஸ்வர்யாவும் மியூசிக் ஆல்பம், பட இயக்கம் என புது புது அவதாரத்தில் மாஸ் காட்டி வருகிறார். அதுமட்டுமின்று, ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலிவுட்டில் நேரடியாக படம் ஒன்றை இயக்கவுள்ளார்.