Plastic Bag: சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத நாள் 2022...இன்று முதல் புதிய மாற்றம் நம்மில் இருந்தே துவங்கட்டும்

Published : Jul 02, 2022, 11:34 AM IST

International Plastic Bag Free Day 2022: பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க, ஆண்டுதோறும் ஜூலை 3 ஆம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லா நாள் கடைபிடிக்கப்படுகிறது.

PREV
15
Plastic Bag: சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத நாள் 2022...இன்று முதல் புதிய மாற்றம் நம்மில் இருந்தே துவங்கட்டும்
plastic bags

பிளாஸ்டிக்கிலிருந்து விடுபடுங்கள் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க, ஆண்டுதோறும் ஜூலை 3 ஆம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லா நாள்(International Plastic bag free day) கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலைக் காக்கவும், புவி வெப்பமடையாமல் தடுக்கவும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்  இந்நாளின் முக்கிய குறிக்கோளாகும். 

மேலும் படிக்க...Breast Milk : தாய்ப்பால் சுரப்பை இயற்கையாக அதிகரிக்க செய்யும் 5 அற்புத உணவுகள்...கட்டாயம் பின்பற்றுங்கள்...

25
plastic bags

இந்த நாளானது, பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. நம்மில் பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக்கை, அத்தனை சுலபத்தில் அகற்றிவிட முடியாதுதான். ஆனால், இந்த நாளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் எளிதான மாற்றுப் பொருட்கள் கிடைக்கும் பிளாஸ்டிக் ஆகியவற்றை, நாம் மனது வைத்தால் முற்றிலுமாகத் தவிர்க்க முடியும்.

35
plastic bags

அதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு கடந்த 2022, ஜூலை 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் ஸ்ட்ரா உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்துக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏனெனில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பூமிக்கும், கடல்சார் உயிரினங்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கும் என சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தடை விதிக்கப்படுகிறது.
 

மேலும் படிக்க...Breast Milk : தாய்ப்பால் சுரப்பை இயற்கையாக அதிகரிக்க செய்யும் 5 அற்புத உணவுகள்...கட்டாயம் பின்பற்றுங்கள்...

45
plastic bags

நம்மில் புதிய மாற்றம்:

பழங்கள், காய்கறி போன்றவற்றிற்கு துணிப் பைகளைப் பயன்படுத்தலாம். நாம் வெளி இடங்களுக்கு செல்லும் போது 90-களில் அதிகம் புழக்கத்தில் இருந்த மஞ்சள் பை பயன்படுத்தனும் என்றில்லை, இப்போதெல்லாம் விதவித டிசைன்களில் நவீன வடிவங்களில் பைகள் வந்துவிட்டன. இவை குறைந்த எடையில் நீடித்த உழைப்பைக் கொடுக்கும்.  ஒயர் கூடை, சணல் பைகள் சற்றே விலை உயர்வு என்றாலும் பல முறை பயன் தரும். அதேபோன்று குறைந்த எடையுள்ள பேன்சி ஸ்டோர், மருந்தகங்கள் பொருட்களை வாங்கும் போது காகித பைகளை  பயன்படுத்தலாம். 


 

55
plastic bags

 பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:

மக்கள் கட்டாயம் பிளாஸ்டிக் கவர்கள், பேக்கிங் பொருட்கள் உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை நாம் முழுமையாகத் தவிர்க்கவேண்டும். ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக்கை முழுமையாக சிதைவுக்கு உட்படுத்தி, மறுசுழற்சி செய்து, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத மாற்றுப் பொருளைக் கண்டறிய வேண்டும். அரசாங்கம், குப்பைகளை முறையாக மறு சுழற்சி செய்து அகற்ற வேண்டும். இதன் மூலம் சுற்றுசூழல் மேம்படும். 

 மேலும் படிக்க....Abortion Tablet: கருக்கலைப்பு மாத்திரை எடுத்துக்கொள்ள போறீங்களா? யாருக்கு அவசியம்..யாருக்கு உயிருக்கு ஆபத்து?

click me!

Recommended Stories