Budhan Peyarchi 2022: இன்று மிதுன ராசியில் புதன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம், செல்வம் பெருகும்

First Published | Jul 2, 2022, 8:03 AM IST

Budhan Peyarchi 2022 Palangal: புத்தி மற்றும் பேச்சின் கடவுளாக கருதப்படுபவர் புதன், ஜூலை 2 ஆம் தேதி அதாவது இன்று மிதுனம் ராசியில் நுழைவார். இதனால், சில ராசிக்காரர்களுக்கு இன்று முதல் சிறப்பான யோகம் பிறக்கும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். அப்படி யாருக்கு என்னென்னெ பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். 

Budhan Peyarchi 2022

ஜூலை 2 ஆம் தேதி புதன் பெயர்ச்சி 2022:

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜூலை 2 ஆம் தேதி, புத்தி, பேச்சு, செல்வம், பெருமை, திருமண வாழ்க்கையின் காரணியான புதன் கிரகம் மிதுனம் ராசியில் நுழையும். புதனின் இந்த ராசி மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும். புதன் 68 நாட்கள் மிதுன ராசியில் இருப்பார். இதைத் தொடர்ந்து சூரிய பகவான் ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். இதனுடன் செவ்வாய் மற்றும் சுக்கிரனும் ஜூலை மாதத்தில் மாறுவார்கள். கிரகங்களின் இந்த நிலை மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்களும், அபரிமிதமான லாபமும் கிடைக்கவுள்ளது என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க....Sani Peyarchi 2022: மகரத்தில் சனி பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு சனிபகவான் அக்டோபர் 23 வரை கருணை காட்டுவார்...

Budhan Peyarchi 2022

 மிதுனம்:

புதன் பெயர்ச்சி, மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு பேச்சில் இனிமை இருக்கும், குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கல்விப் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.  நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். உத்தியோகத்தில் வருமானம் அதிகரிக்கும். அதிகப்படியான செலவுகளால் சிரமப்படுவீர்கள். பணியிடத்தில் சிரமங்கள் ஏற்படலாம்.

மேலும் படிக்க....Sani Peyarchi 2022: மகரத்தில் சனி பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு சனிபகவான் அக்டோபர் 23 வரை கருணை காட்டுவார்...

Tap to resize

Budhan Peyarchi 2022

விருச்சிகம்:

புதன் பெயர்ச்சி உங்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆடைகள் மீதான நாட்டம் அதிகரிக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.உங்கள் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். செலவுகள் கூடும். குடும்பத்தின் பெரியவரிடமிருந்து பணம் பெறலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதீத ஆர்வத்தை தவிர்க்கவும். கல்விப் பணிகளில் மகிழ்ச்சியான முடிவுகள் இருக்கும்

Budhan Peyarchi 2022

கன்னி:

புதன் பெயர்ச்சி, மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இருப்பினும், உரையாடலில் பொறுமை தேவை. உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். மரியாதை கூடும். நண்பர்களை சந்திப்பீர்கள். நம்பிக்கை மிகுதியாக இருக்கும். மன நிம்மதி ஏற்படும். திடீர் பண உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். 

மேலும் படிக்க....Sani Peyarchi 2022: மகரத்தில் சனி பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு சனிபகவான் அக்டோபர் 23 வரை கருணை காட்டுவார்...

Latest Videos

click me!