Sani Peyarchi 2022 Palangal: ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி பகவான் நீதி மற்றும் தண்டனையின் கடவுளாக கருதப்படுகிறார். சனி பகவான் வக்ர பெயர்ச்சி ஒவ்வொரு நபரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. சனியின் உக்கிர பார்வை காரணமாக, மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இருப்பினும், சில ராசிகளுக்கு சனி பகவான் வேண்டிய வரத்தை அள்ளி தருபவராக இருக்கிறார்.
அப்படியாக, 30 ஆண்டுகளுக்குப் பின்னர், 2022 ஏப்ரல் மாதத்தில் சனி பகவான் மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, சனி பகவான் ஜூன் 5 முதல் அக்டோபர் 23 2022 வரை கும்பம் ராசியில் வக்ர நிலையில் இருப்பார். இதற்கிடையில், ஜூலை 12, 2022 அன்று, சனி மகர ராசிக்கு வக்ர பெயர்ச்சியாவார். அதன் பிறகு மீண்டும் ஆகஸ்ட் 17 அன்று, சனி கும்ப ராசிக்கு மாறுவார். இதையடுத்து, 23 அக்டோபர் 2022 அன்று சனி மகரத்தில் மீண்டும் நேர்கதியாக பெயர்ச்சி அடைவார். இதனால், யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்த் நேரத்தில், நீங்கள் வணிகத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கூட்டுப்பணிகள் இந்த காலத்தில் நல்ல லாபத்தை தரும். இந்த நேரம் சந்தைப்படுத்தல் துறையுடன் தொடர்புடையவர்களுக்கும் சாதகமானதாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
34
Sani Peyarchi 2022 Palangal
சிம்மம்:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். மனைவியுடன் உறவில் இனிமை இருக்கும். திடீர் பண வரவு உண்டாகும். இந்த காலகட்டத்தில் நீங்கள் தற்செயலாக ஒரு பெரிய தொகையை பெறக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வருமானம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறலாம்.
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு வியாபாரம் விரிவடையும் வாய்ப்புகள் இப்போது உள்ளன. வியாபாரத்தில் புதிய தொடர்புகளால் நன்மைகள் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு இந்த நேரத்தில் புதிய வேலை கிடைக்கும். அதே நேரத்தில், வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். கன்னி ராசியினரின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவரும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களது பரிபூரண ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.