Calcium Foods: கால்சியம் சத்து அதிகம் உள்ள ஆரோக்கியமான சூப்பர் 5 உணவுகள்...மிஸ் பண்ணிடாதீங்க..

First Published Jul 1, 2022, 4:13 PM IST

Calcium Foods: நாம் தினமும் சாப்பிடும் உணவில், கால்சியம் சத்து நிறைந்த  5 உணவு பொருட்களை உட்கொள்வது அவசியம். அவை என்னென்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.

Calcium Foods:

கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான ஆரோக்கியத்தையும் வலுவையும் கொடுக்கிறது. கால்சியம் சத்து குறைப்பாட்டால் உடலின் ஒட்டுமொத்த நிலைத்தன்மை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.  நமது உடலில் கால்சியம் சத்து குறைந்து விட்டால் முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் என பாதிப்புகள் உருவாகும். அஜீரணக்கோளாறு, வாயுத்தொல்லை ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும் கால்சியம் குறைபாடு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 
கால்சியம் சத்து தசையை இயக்குவதற்கும், நரம்பு மண்டலம் செய்தியை மூளைக்கு எடுத்துச் செல்வதற்கும் அவசியம். குறிப்பாக ஆண்களை காட்டிலும், பெண்கள்தான் கால்சியம் சத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

 மேலும் படிக்க....Red Blood Cell: உடலில் இரத்த சிவப்பணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கணுமா? இந்த 5 ஊட்டச்சத்துக்கள் அவசியம்...

Calcium Foods:

கீரை வகைகள்:

கீரை வகைகளில் கால்சியம் சத்து உண்டு. பசலைக்கீரையில் சற்றுக் கூடுதலாக இருக்கும். தினமும் கீரைச் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. வாரத்திற்கு இரு முறையாவது புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை துவையல் சாப்பிட வேண்டும். மணத்தக்காளி கீரையைக் கூட்டாகவோ, துவையலாகவோ செய்து சாப்பிட்டால் கால்சியம் சத்து அதிகமாக கிடைக்கும்.

 மேலும் படிக்க....Red Blood Cell: உடலில் இரத்த சிவப்பணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கணுமா? இந்த 5 ஊட்டச்சத்துக்கள் அவசியம்...

Calcium Foods:

பால்:

ஊட்டச்சத்துகளில் மிகவும் முக்கியமான கால்சியம் பாலின் மூலம் பெறப்படுகிறது. கால்சியம் சத்து, பால், தயிர், மோர், வெண்ணெய் பாலாடைக்கட்டி என்று அனைத்து வகையான பால் பொருட்களிலும் நிரம்பியுள்ளது.  

சோயா பால்:

பால் பொருட்கள் சாப்பிட முடியவில்லை என்று வருத்தப்படுபவர்களுக்கு, சோயா பால் நல்ல மாற்றாக உள்ளது. பசும்பாலில் இருக்கும் அதே அளவுள்ள கால்சியம், சோயா பாலிலும் இருக்கறது.

Calcium Foods:


பாதாம் மற்றும் பூசணி விதைகள்:

வைட்டமின் E சத்து மற்றும் கனிமச்சத்துக்களில் நிறைந்துள்ள பாதாமில், நீங்கள் ஓரளவுக்கு கால்சியம் பெறலாம். 30 கிராம் பாதாமில் 75 எம்ஜி கால்சியம் உள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் சாப்பிட்டு வரலாம். பூசணி விதைகள், எள்ளு, கசகசா உள்ளிட்ட பல்வேறு விதைகளில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. ஒரு ஸ்பூன் கசகசாவில் 127 எம்ஜி கால்சியம் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

 மேலும் படிக்க....Red Blood Cell: உடலில் இரத்த சிவப்பணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கணுமா? இந்த 5 ஊட்டச்சத்துக்கள் அவசியம்...

பருப்பு வகைகள்:

பீன்ஸ், கடலைப் பருப்பு, பாசி பருப்பு, மசூர் தால் உள்ளிட்ட பல்வேறு பருப்பு வகைகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது. தினமும் ஏதும் ஒரு வகை பருப்பை சேர்ப்பது மூலம், லாக்டோஸ் இன்டாலரன்ஸ் உள்ளவர்கள் தேவையான கால்சியம் பெறலாம். குறிப்பாக, உளுந்தில் எலும்புகளை வலுவாக்கும் சத்து இருக்கிறது.மேலும் இதில், இரும்பு, மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

click me!