July Monthly Horoscope: ஜூலை மாதம் முழுவதும் இந்த 4 ராசிகளுக்கு பிரச்சனைகள் இருக்கும்..எச்சரிக்கை அவசியம்..

First Published | Jul 1, 2022, 2:40 PM IST

Horoscope Today -Monthly Horoscope 2022: ஜூலை மாதம் நிகழும் கிரகங்களின் மாற்றம் காரணமாக, இந்த ராசிகளுக்கு பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எனவே, எந்தெந்த ராசிகள் எச்சரிக்கை அவசியம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

planets 2022

ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனது ராசியை மாற்றுகிறது. ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஜூலை மாதத்திலும் 5 பெரிய கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. அப்படியாக, இந்த மாதம், புதன், சூரியன், சுக்கிரன், சனி, வியாழன் ஆகிய கிரகங்கள் நிலை மாறவுள்ளன. இந்த மாதத்தில் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களையும் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளையும் சந்திக்கவுள்ளனர். அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

 மேலும் படிக்க....July Monthly Horoscope: இந்த மாதம் ராசிபலன்..ஜூலை 1 முதல் 31 ஜூலை 2022 வரை, இந்த ராசிகளுக்கு பண வரவு உண்டாகும்

These planets are dangerous

மேஷம்:

ஜூலை மாதம் 5 கிரகங்களின் ராசி மாற்றம், மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல மற்றும் கெட்ட பலன்கள் இருக்க கூடும். கிரகங்களின் நிலை மாற்றத்தால் உங்களுக்கு இந்த மாதம் பண இழப்பு ஏற்படலாம். வெளி இடங்களுக்கு செல்லும் போது எச்சரிக்கை அவசியம். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

Tap to resize

planets

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்கள்  கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை மாற்றம் காரணமாக ஜூலை மாதம் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். நிதி சம்பந்தமான கவலைகள் இருக்கும். இருப்பினும், தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். எதனையும் சிந்தித்து செயல்படுங்கள். யாரையும் நம்ப வேண்டாம்.

 மேலும் படிக்க....July Monthly Horoscope: இந்த மாதம் ராசிபலன்..ஜூலை 1 முதல் 31 ஜூலை 2022 வரை, இந்த ராசிகளுக்கு பண வரவு உண்டாகும்

planets

கடகம்:

ஜூலை முழுவதும் நிதி விஷயங்களில் கடக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.  ஏனெனில், கடக ராசியில் பிறந்தவர்கள் தற்போதைக்கு சனியின் தாக்கத்தில் இருக்கிறார்கள். சனியின் நிலை மாற்றத்தால் ஜூலை 12 முதல் உங்கள் பிரச்சனை குறையலாம். இருப்பினும், பணி இடத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும்.

planets

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் தாக்கம் முழு வீச்சில் இருக்கும். சனியின் தாக்கம் இருப்பதால் இந்த காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மகர ராசிக்காரர்கள் குறிப்பாக பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குடும்ப உறுப்பினர்களுடன் பொறுமையாக இருப்பது நல்லது. முடிவுகளை எடுப்பதற்கு முன்பு எந்த விஷயத்தையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது அவசியம். 

 மேலும் படிக்க....July Monthly Horoscope: இந்த மாதம் ராசிபலன்..ஜூலை 1 முதல் 31 ஜூலை 2022 வரை, இந்த ராசிகளுக்கு பண வரவு உண்டாகும்

Latest Videos

click me!