Doctor's Prescription 10 code words: மருத்துவர்களும் தங்கள் மருந்து சீட்டுகளில் சில குறியீடுகளை எழுதுகிறார்கள். அந்த குறியீடுகள் என்ன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதை பற்றி இந்த பதிவில் நீங்கள் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
நாம் உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்வோம். டாக்டர்கள் தங்களால் இயன்றவரை நமது நோயைக் கண்டறிந்து, அதை விரைவில் போக்க உதவுகிறார்கள். மருத்துவர் நம் உடலை பரிசோதனை செய்து ஒரு சீட்டில் நம் உடலில் ஏற்பட்ட நோய்க்கான விவரங்கள் மற்றும் அதற்கான மருந்துகளை பற்றி எழுதுவார். இந்த சீட்டைத்தான் நாம் மருத்துவரின் பரிந்துரை சீட்டு (Prescription) என்று சொல்லுவோம்.
அதாவது, Prescription என்பது நம்முடைய உடலை பரிசோதித்த மருத்துவர் அவர்களுக்கு உடல்நிலை முன்னேற்றத்திற்கான மருந்துகளை எழுதிக்கொடுக்கிற ஒரு வரைமுறையே (Health plan) ஆகும். ஆனால், அந்த கையெழுத்தை மருத்துவ துறையில் இருப்பவர்கள் மட்டுமே, படிக்க முடியும் என்று அடிக்கடி கூறப்படுகிறது.
24
prescription doctor
அப்படி, மருத்துவர்களும் தங்கள் சீட்டுகளில் சில குறியீடுகளை எழுதுகிறார்கள். அந்த குறியீடுகள் என்ன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதை பற்றி இந்த பதிவில் நீங்கள் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். அவர்களின் கையெழுத்து மட்டுமே உங்களுக்கு புரியவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் மருத்துவத்தைப் படிக்கவில்லை என்றால், குறியீடுகள் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. இந்த குறியீடுகள் வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கின்றன மற்றும் மருந்து நிர்வாகிகள் இந்த குறியீடுகளின் அர்த்தத்தின் அடிப்படையில் மருந்துகளை வழங்குகிறார்கள். இதனை பற்றி தெரிந்து கொள்வோம்.
TID: ஒரு நாளைக்கு மூன்று முறை மற்றும் PO means பிஓ என்றால் மருந்து ஊசி மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ எடுக்கப்படக்கூடாது.
BD/BDS: மருந்தை இரண்டு முறை எடுத்துக்கொள்ள வேண்டும்
TDS: மருந்து மூன்று முறை எடுக்கப்பட வேண்டும் என்று அர்த்தம்
44
prescription doctor
QTDS: ஒரு நாளைக்கு நான்கு முறை மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
QID: ஒரு நாளைக்கு நான்கு முறை
OD: ஒரு நாளைக்கு ஒரு முறை
BT: while sleeping (தூங்கும் போது)
BBF: Before breakfast (காலை உணவுக்கு முன்)
எனவே, மேற்சொன்ன விவரங்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். எனவே, இனியாவது மருத்துவமனையில் மருத்துசீட்டு வாங்கும் போது அவற்றின் குறியீடுகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும், உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கு, பெரியவர்களுக்கும் உங்களின் அறிவுரையின் கற்றுக்கொள்ளுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.