Pigeon droppings Diseases: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..நுரையீரல் சார்ந்த நோய்கள் புறா எச்சத்தால் கூட வரும் என்று இதுவரை யாராவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா..? இது குறித்து மருத்துவ நிபுணர்கள் தரப்பில், பகிரும் தகவல் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இதையடுத்து, சிட்டக்கோசிஸ் (psittacosis) எனப்படும் மனிதர்களின் நுரையீரலை பாதிக்கும் நோய் குறித்த பேச்சுக்கள் சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இது புறாவின் எச்சத்தால் வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதிக அளவிலான பறவைகளின் எச்சங்கள், வறண்ட பின்பு காற்றில் பரவும். அதை நாம் தொடர்ந்து சுவாசிக்கும்போது நுரையீரல் தொற்றை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். மேலும், புறா உள்ளிட்ட பறவைகளால் 50க்கும் மேற்பட்ட நோய்களை மனிதனுக்கு பரப்ப முடியுமாம் என்கின்றனர்.
35
pigeons infectious disease
காற்றின் மூலம் பரவும் தன்மை..?
இந்த நோய்கள் பெரும்பாலும் காற்றின் மூலம் பரவும் என்பதால் தான். மற்ற பறவைகளைக் காட்டிலும் புறாவின் எச்சங்கள் மனிதர்களுக்கு கடுமையான அலர்ஜியை உருவாக்கும். அதுமட்டுமல்லாமல், இவைகள் சர்க்கரை வியாதி, நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஆஸ்துமா குறைபாடு கொண்டவர்களை எளிதில் பாதிக்கும் அபாயம் இருக்கிறதாம். இந்த நோயினால் பாதிப்படைந்தவர்கள், சுவாசப்பாதை சுருங்கி எப்போதும் இருமிக் கொண்டு இருப்பார்கள். போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறல் ஏற்படும் நிலையில் இருப்பார்களாம்.
மாசடைந்த காற்றை சுவாசிப்பது, சரியாக பராமரிக்கப்படாத ஏர் கண்டிஷனர்களில் இருந்து வரும் மெல்லிய தூசியை சுவாசிப்பது, புகை எல்லாமே பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இதனால், தொடர்ந்து நுரையீரலில் ஒவ்வாமை ஏற்பட்டு, காய்ச்சல், இருமல், உடல் வலி, மூட்டு வலி, மூச்சுத்திணறல் ஏற்படுத்துமாம்.
55
pigeons infectious disease
பாதிப்பில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது..?
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளுங்கள். குறைந்தபட்சம் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை பறவைகளின் எச்சங்கள் காய்வதற்குள் அகற்ற வேண்டியது அவசியம். சுவாசப் பிரச்சனைகள் இருந்தால், புகைப்பழக்கத்தை கைவிடுங்கள். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் பறவைகள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட கால பிரச்சனைகள் இருந்தால் கை மருத்துவத்தை விட்டு விட்டு மருத்துவரை அணுகவும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.