Puri Jagannath: கோலாகலமாக துவங்கிய பூரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை...உற்சாகத்துடன் ஆர்ப்பரிக்கும் பக்தர்கள்

First Published | Jul 1, 2022, 10:58 AM IST

Happy Jagannath Rath Yatra 2022: Wishes, Images, Greetings, Quotes: உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகன்னாதர் கோயில் ரத யாத்திரையை இன்று கோலாகலமாக துவங்கியுள்ளது. இதில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு வருகின்றனர். 

Puri Jagannath Temple Rath Yatra

ஒடிஷா மாநிலம் பூரியில் உள்ள ஜெகன்னாதர் கோயில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும்  லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த பூரி ஜெகன்நாதர் ஆலயம், 1ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து தமிழ் மன்னனான சோழ மன்னரால் கட்டப்பட்டது. இந்த தேர் திருவிழாவின் 4 ம் நாளில் ஜெகன்நாதரின் மனைவியான லட்சுமி தேவி இறைவனை தேடி குண்டிச்சா கோயிலுக்கு வருவதாக நம்பப்படுகிறது. எட்டு நாட்கள் குண்டிச்சா கோயிலில் தங்கிய பிறகு, தெய்வங்கள் ஒன்பதாம் நாளில் தங்கள் வீடான ஜகன்நாதர் கோயிலுக்கு திரும்புகின்றன, இது பஹுதா யாத்ரா என்று அழைக்கப்படுகிறது.

 மேலும் படிக்க.....Jagannath: பூரி ஜெகநாதர் கோவிலின் ரகசியம் என்ன? கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மர்ம முடிச்சுகள்..ஓர் பார்வை

Puri Jagannath Temple Rath Yatra

இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் சுக்ல பக்ஷத்தின் இரண்டாம் நாளில் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை திருவிழா நடைபெறும். அதன் தொடக்கமாக ஜூலை 1 ஆம் தேதி இன்று தேர் திருவிழா ஆரம்பமாகிறது. இந்த தேர் திருவிழா நாளில்  ஒவ்வொரு ஆண்டும் உடன்பிறப்புகள், ஜகன்னாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரா ஆகியோர் தனித்தனியாக மூன்று ரதங்களில், புரி நகரத்தை சுற்றி யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு வேண்டிய வரம் அள்ளி தருவார்களாம். 

Tap to resize

Puri Jagannath Temple Rath Yatra

அதற்கான 3 தேர்கள் வடிவமைப்பு பணி கடந்த மே 3 ம் தேதி துவங்கி நடைபெற்றது. அதன்படி,  ஜகன்னாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்ராவுக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய மூன்று பிரம்மாண்டமான தேர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில், ஜகந்நாதரின் தேரில் 16 சக்கரங்களும், பாலபத்ரரின் தேரில் 14 சக்கரங்களும், சுபத்திரை தேரில் 12 சக்கரங்களும்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

Puri Jagannath Temple Rath Yatra

ஜெகன்நாத கோவில் தேர் திருவிழா நேரம் ;

பஞ்சாங்கத்தின்படி, ஒடிசா, கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் அமாவாசைக்கு மறுநாள் அவர்களின் மாதம் தொடங்கும். அதனால், ரத யாத்திரை ஆஷாட மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் தேதியில் தொடங்குகிறது. அதன்படி., இந்த ஆண்டு தேர் திருவிழா ஜூலை 1ம் தேதி காலை 10:49 மணிக்கு தொடங்கி மதியம் 01:09 மணி வரை இருக்கும். அதன் காரணமாக ஜூலை 1ம் தேதி, இன்று வெள்ளிக்கிழமை சூரியன் உதிப்பில் துவக்கி தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. 

Puri Jagannath Temple Rath Yatra

பூரியில் 125 மணல் ரதங்கள்:
 
மேலும், ஜகந்நாதரின் ரத யாத்திரையை முன்னிட்டு, பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் 125 மணல் ரதங்களையும், ஜகந்நாதரின் மணல் சிற்பத்தையும் உருவாக்கியுள்ளார். ஏற்கனவே, 100 மணல் தேர்களை உருவாக்கி சாதனை படைத்த பட்நாயக், தற்போது பூரி கடற்கரையில் 125 மணல் தேர்களை செதுக்கி லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டுக்காக மற்றொரு சாதனையை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பட்நாயக் தனது மணல் கலை நிறுவன மாணவர்களுடன் சேர்ந்து இந்த சிற்பங்களை முடிக்க சுமார் 14 மணிநேரம் தேவைப்படுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 மேலும் படிக்க.....Jagannath: பூரி ஜெகநாதர் கோவிலின் ரகசியம் என்ன? கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மர்ம முடிச்சுகள்..ஓர் பார்வை

Latest Videos

click me!