கீரைகள்:
கீரைகள் தாய்ப்பாலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, உங்களது உணவில் கீரைகளுக்கு முக்கிய இடம் இருக்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக, முருங்கை கீரை:
முருங்கை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. முருங்கை இலையை சின்ன வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி உப்பு சாதத்துடன் சேர்த்து உட்கொள்ளவும். இது தாய்ப்பாலை அதிகரிக்க உதவும். முருங்கை கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி, முருங்கை கீரையை வேகவைத்து பாசிபருப்பும் சேர்த்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் நிச்சயம் அதிகரிக்கும். இதனால் தாயும், சேயும் நலமுடன் இருக்கலாம்.
மேலும் படிக்க....Jamun Fruit: கல்லீரல் பிரச்சனையை சரி செய்யும் நாவல் பழம்...இன்னும் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா..?