முதலையை முத்தமிட்டு திருமணம் செய்த 90ஸ் கிட்ஸ் மேயர்...பெண் கிடைக்காத விரக்தியா? கலாய்க்கும் நெட்டிசன்கள்...

First Published Jul 2, 2022, 12:28 PM IST

Mexican Mayor Weds Crocodile: மெக்சிகோ நாட்டினை சேர்ந்த மேயர் ஒருவர், மண கோலத்தில் இருந்த முதலைக்கு முத்தமிட்டு, அதனுடன் நடனமாடி இறுதியில் திருமணம் செய்து கொண்ட விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது.

Mexican Mayor Weds Crocodile:

உலகின் எங்கோ ஒரு மூலையில் எதோ ஒரு வித்தியாசமான நிகழ்வுகள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. சில நேரம் அந்த நிகழ்வுகளை நாம் வேடிக்கையாக கடந்து செல்வோம். சில நேரம் பிரச்சனைகள் வந்து தொல்லை கொடுக்கும். சில நேரம் மகிழ்ச்சியாக இருக்கும். அப்படியான ஒரு நிகழ்வு தற்போது மெக்சிகோ நாட்டில் அரங்கேறியுள்ளது. 

மேலும் படிக்க....Honeymoon: உலகின் ஆபத்தான ரயிலில் ஹனிமூன் போட்டோஷூட்..ஏன்பா உங்களுக்கு வேற இடமே இல்லையா? விளாசும் நெட்டிசன்கள்

Mexican Mayor Weds Crocodile:

ஆம், மெக்சிகோவை சேர்ந்த ஹொமேலூலா விக்டர் என்பவர் இந்த விசித்திரமான செயலில் ஈடுபட்டுள்ளார். மழை பெய்யும் எனும் நம்பிக்கையில் முதலையை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். நம்முடைய முன்னோர்கள் மழைக்கு வேண்டி பல்வேறு சுவாரஸ்யமான  சடங்குகளில் ஈடுபடுவதை நாம் பார்த்திருப்போம். மாரியம்மனை வழிபாடு, கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம். ஆனால், இவர் 
 மழைக்காக வித்தியாசமாக முறையில் யோசித்து சடங்குகளை மேற்கொண்டுள்ளார். 

Mexican Mayor Weds Crocodile:

அதன்படி, மெக்சிகோவில் அமைந்துள்ள சிறிய நகரம் சாண்ட் பெட்ரோ ஹூமெலூலா நகரத்தின் மேயர் ஹொமேலூலா விக்டர், கடந்த வாரம் முதலையினை கிருஸ்துவ முறைப்படி  திருமணம் செய்துள்ளார். இந்த சடங்குத் திருமணத்தின் போது  முதலைக்கு, கிருஸ்துவ முறைப்படி வெள்ளை நிற திருமண உடை அணிவிக்கப்பட்டுள்ளது. தலையில் கீரிடம் வைத்து திருமண கோலத்தில், முதலையுடன் சேர்ந்து மேயரும் காட்சி தந்தார். இறுதியில் உற்றார் உறவினர்கள் முன்னிலையில், முதலைக்கு மேயர் முத்தமிட்டும், முதலையுடன் நடனமாடியும்   திருமணம் செய்து கொண்டார்.


மேலும் படிக்க....Honeymoon: உலகின் ஆபத்தான ரயிலில் ஹனிமூன் போட்டோஷூட்..ஏன்பா உங்களுக்கு வேற இடமே இல்லையா? விளாசும் நெட்டிசன்கள்

Mexican Mayor Weds Crocodile:

மெக்சிகோவில் இம்மாதிரியான விநோத திருமணங்கள் நடப்பது இது முதன் முறை அல்ல. இயற்கையின் கருணையை வேண்டி இம்மாதிரியான சடங்குகள் பழங்குடியினரால் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. திருமணம் குறித்து மேயர் பேசும்போது, “ இயற்கையிடம் மழை, உணவு, மீன் வேண்டி நாங்கள் இந்த பிரார்த்தனையை செய்கிறோம், இது எங்கள் குல நம்பிக்கை” என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த செய்தியை படித்த நெட்டிசன்கள் வழக்கம் போல் கலாய்த்து வருகிறார்கள். சிலர், 90ஸ் கிட்ஸ் என்பதால் பெண் கிடைக்காத விரக்தியா..? என்றும் முதலையின் மீது உள்ள லவ்வால் இவ்வாறு செய்ததாகவும், சிலர் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க....Honeymoon: உலகின் ஆபத்தான ரயிலில் ஹனிமூன் போட்டோஷூட்..ஏன்பா உங்களுக்கு வேற இடமே இல்லையா? விளாசும் நெட்டிசன்கள்
   

click me!