வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பது பெற்றோரின் கடமை. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தையின் உணவில் ஏதாவது ஒரு வகையில் நெல்லிக்காய் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். ஏனெனில் 100 கிராம் நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி-யானது சுமார் 20 ஆரஞ்சு பழத்திற்கு சமம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் குழந்தைகள் நெல்லிக்காய் புளிப்பாக இருப்பதால் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே, பிற உணவுகளுடன் அதை சேர்க்கும்போது சுவையாகவும் இருக்கும், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி இப்போது வளரும் குழந்தைகளுக்கு நெல்லிக்காய் கொடுப்பதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.