இன்றைய ஸ்பீடான காலகட்டத்தில் காலை உணவாக என்ன சாப்பிடுகிறோம் என்பதில் நாம் கவனம் செலுத்துவதில்லை. சிலரோ காலை உணவையே சாப்பிடுவதில்லை. இன்னும் சிலரோ காலை உணவாக பிரட் சாப்பிட விரும்புகிறார்கள். டயட்டில் இருப்பவர்கள் சிலர் கூட லைட் பிரேக்ஃபாஸ்ட் ஆக பிரட் தான் சாப்பிடுகிறார்கள். ஆனால் இப்படி தினமும் காலையில் வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனெனில் இது பல உடல்நிலை பிரச்சினைகளுக்கு என்கின்றனர் நிபுணர்கள். சரி இப்போது இந்த பதிவில் ஏன் காலை வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடக்கூடாது என்று தெரிந்து கொள்ளலாம்.
25
வெறும் வயிற்றில் ஏன் பிரட் சாப்பிடக்கூடாது?
இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் :
காலையில் வெறும் வயிற்றில் குறிப்பாக வெள்ளை பிரட் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது கூடுதல் ஆபத்தை தான் ஏற்படுத்தும். ஏனெனில் பிரட் அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவு என்பதால், அது இரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்திவிடும்.
35
மலச்சிக்கல் :
பிரட்டில் நார்ச்சத்து குறைவாகவே உள்ளதால் செரிமான அமைப்பு பலவீனமாகும். இதனால் குடல் இயக்கங்களும் பாதிக்கப்பட்டு வயிற்று வலி, வாயு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே காலையில் வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவது முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
பிரட்டில் அதிக கிளைசெமிக் குறியீடு உள்ளதால் பசி அதிகமாக எடுக்கும். இதனால் அதிகமாக சாப்பிட தூண்டப்படும். இதன் விளைவாக எடை பாதிக்கப்படும். அதுபோல வெள்ளை பிரட்டில் சோடியம் அதிகமாக உள்ளதால் காலையில் வெறும் வயிற்றில் உணவுகளை சாப்பிட்டால் வயிறு உப்புசம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
55
குறிப்பு :
காலை உணவாக பிரட்டுக்கு பதிலாக ஓட்ஸ், முட்டை, பழங்கள், காய்கறிகள் சாப்பிடுங்கள். இவற்றில் இருக்கும் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே, நீங்கள் காலை உணவாக சத்தானதாகவும், ஜீரணிக்க எளிதாகவும் இருக்க கூடிய உணவுகளை சாப்பிடுங்கள்.