Silver Jewellery Cleaning Tips : உங்கள் பழைய வெள்ளி நகைகளை புத்தம் புதியது போன்று பிரகாசிக்க வைக்க அதை சரியான முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
வெள்ளி பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் அதன் பளபளப்பு மங்கிவிடும். அதுபோல வெள்ளி நகைகளை பெண்கள் அதிகமாக பயன்படுத்துவதால் காலப்போக்கில் அதன் பொலிவை இழந்து பழசு போல காட்சியளிக்கும். சிலசமயம் கறுத்து கூட போகும். ஆனால் சில வீட்டு பொருட்களை பயன்படுத்தி உங்களது பழைய வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களை மீண்டும் புதுசு போல் பளபளக்க செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
26
கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு
இதற்கு ஒரு பாத்திரத்தில் சூடான நீரை ஊற்றி அதில் எலுமிச்சை சாறு மற்றும் 3 ஸ்பூன் கல் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது அந்த நீரில் உங்களது வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை போட்டு சுமார் 5 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு சுத்தமான துணியால் துடைத்தால் போதும். நகைகள் புத்தம் புதியது போல் இருக்கும்.
36
கெட்சப்
இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மைகள் பொருட்களை சுத்தம் செய்யலாம். இதற்கு ஒரு பேப்பர் டவலில் கெட்சப்பை ஊற்றி அதை கொண்டு வெள்ளி நகைகள் பொருட்கள் மீது தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து விட்டு பிறகு சுத்தமான துணியால் துடைக்கவும். இப்படி செய்தால் வெள்ளி நகைகள் பொருட்கள் மின்னும்.
வெள்ளி நகைகள், பொருட்களை டூத் பேஸ்ட் கொண்டும் சுத்தம் செய்யலாம். இதற்கு சிறிதளவு டூத் பேஸ்ட்டை நகைகள், வெள்ளி பொருட்கள் மீது தடவி 6 நிமிடம் ஊற வைத்துவிட்டு பிறகு குளிர்ந்து நீரில் கழுவவும்.
56
வினிகர் மற்றும் பேக்கிங் சோடா
வினிகர் மற்றும் பேக்கிங் சோடா வெள்ளி பொருட்கள் சுத்தம் செய்வதற்கு பெரிதும் உதவும். இதற்கு ஒரு பாத்திரத்தில் சூடான நீரில் அரை கப் வினிகர், 2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து அதில் வெள்ளி நகைகள் பொருட்களை போட்டு 2 மணி நேரம் ஊற வைத்து பிறகு குளிர்ந்து நீரால் கழுவி சுத்தமான துணியால் துடைக்கவும். இப்போது பார்த்தால் உங்களது வெள்ளி நகைகள், பொருட்கள் புத்தம் புதுசு போல பளபளக்கும்.
66
துணி துவைக்கும் சோப்பு தூள்
இதற்கு ஒரு பாத்திரத்தில் சூடான நீரூற்றி அதில் சிறிதளவு துணி துவைக்கும் சோப்புத்தூள் சேர்த்து நன்றாக கலந்து, வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களை அதில் போட்டு 5 நிமிடங்கள் ஊறவைத்து விட்டு பிறகு சுத்தமான நீரால் கழுவி ஒரு துணியைக் கொண்டு துடைக்கவும். இப்படி செய்தால் வெள்ளிப் பொருட்கள் நகைகள் பளிச்சென்று ஜொலி ஜொலிக்கும்.