பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தனது 75வது வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு அவரது கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையே காரணம் ஆகும். பிரதமர் மோடியின் தினசரி பழக்கங்களை காண்போம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17) 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வயதை கடந்தும் உற்சாகமாகவும், உறுதியான உடல்நலத்துடனும் இருப்பதற்கும் காரணம் அவரது கட்டுப்பட்ட வாழ்க்கை முறை தான். மிக பிஸியான அட்டவணையிலும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளித்து வாழும் மோடி, இளைஞர்களுக்கு “ஃபிட் இந்தியா இயக்கம்” மூலமும் ஊக்கம் அளித்து வருகிறார்.
25
பிரதமரின் அதிகாலை நடைமுறை
மிகவும் பிஸியான பணிகளில் மூழ்கியிருந்தாலும், நம் பிரதமர் மோடியின் நாள் துவக்கம் ஒழுங்காக இருக்கும். அதிகாலை 4 மணிக்கே அவர் எழுந்துவிடுவார். இரவு பல முறை தாமதமாக தூங்க வேண்டியிருந்தாலும், மறுநாள் தனது நடைமுறையில் மாற்றமில்லாமல் செயல்படுவார். எழுந்ததும் சில நிமிடங்கள் நடைப்பயிற்சி, பின்னர் சூரிய நமஸ்காரம் மற்றும் தியானம் ஆகும். இவை அவரது தினசரி யோகா நடைமுறைகள். இதுவே அவரை தினமும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.
35
ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி
உணவுப் பழக்கத்தில் கூட எளிமையே முக்கியம். அதிக எண்ணெய் இல்லாமல், சத்தான உணவுகளை தேர்ந்தெடுப்பார். காலை இஞ்சி சேர்த்த தேநீரை அருந்துவார். பிறகு சுட்டது அல்லது வேகவைத்தது போன்ற உணவுகளை விரும்புவார். கிச்சடி, உப்புமா, கடி போன்ற எளிய உணவுகளுடன், தக்காளி பரோட்டா, முருங்கைக்கீரை பரோட்டா போன்ற சத்தான உணவுகளும் அவரது உணவில் இடம்பெறும். குஜராத்தை சேர்ந்தவராக இருப்பதால், தேப்லா, டோக்ளா போன்ற பாரம்பரிய உணவுகளையும் விரும்புவார்.
மோடியின் வாழ்க்கையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்திருப்பது நவராத்திரி நோன்பு. ஒன்பது நாட்களிலும் தினமும் ஒரே பழத்தை மட்டும் சாப்பிடுவார். உதாரணத்திற்கு, முதல் நாள் பப்பாளி சாப்பிட்டால், முழு நவராத்திரி தினமும் பப்பாளியே உண்பார். இது அவருக்கு ஒழுக்கமாகவும், உடல்-மனம் சமநிலையாகவும் இருக்க உதவுகிறது.
55
மோடி டயட் பிளான்
இரவு உணவை மிகவும் முன்னதாகவே சாப்பிடுவார். மாலை 6 மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடாமல் தவிர்ப்பது அவரது வழக்கம். இது ஆயுர்வேதத்திலும் குறிப்பிடப்படும் ஒரு ஆரோக்கியமான நடைமுறையாகும். செரிமானம் சீராகவும், உடல் முழுவதும் சத்துக்கள் சிறப்பாகச் செல்லவும் உதவுகிறது. இந்த எளிய பழக்கவழக்கங்களே அவரை எப்போதும் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கின்றன.