பப்பாளி பழத்தின் இனிப்பான சுவை மற்றும் அதன் புத்துணர்ச்சியூட்டும் தன்மைக்காக பலரும் அதை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொண்ட பப்பாளி பழம் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படுகிறது. நாம் அன்றாட சந்திக்கும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கு கூட பப்பாளி பழம் நிவாரணம் அளிக்கும். இத்தகைய சூழ்நிலையில், காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் உடல் நலத்திற்கு என்ன ஆகும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
26
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
பப்பாளி பழத்தில் வைட்டமின் சி மட்டுமல்லாமல், பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இதனால் பருவ கால தொற்று நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுகிறது.
36
எடை இழப்புக்கு உதவும்
எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பப்பாளி பழம் ஒரு பெஸ்ட் சாய்ஸ். ஏனெனில் இந்த பழத்தில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் இது வயிறை நீண்ட நேரம் நிரப்பிய உணர்வை ஏற்படுத்தும். பசியை கட்டுப்படுத்தும். வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் அதிலிருக்கும் நார்ச்சத்து, நாள் முழுவதும் குறைவான கலோரிகள் சாப்பிடுவதை உறுதி செய்யும்.
பப்பாளி பழத்தில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் அவை சருமத்தை பொலிவாக மற்றும் இளமையாக வைக்க உதவுகிறது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் சருமம் இயற்கையாகவே பொலிவு பெறும்.
56
கண் ஆரோக்கியத்திற்கு நல்லது
பப்பாளி பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால் அவை கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே நீங்கள் எப்போதும் போல பப்பாளி பழத்தை சாப்பிடாமல் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கண் பார்வை தெளிவாக இருக்கும்.
66
இதய ஆரோக்கியம் மேம்படும்
பப்பாளி பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. வெறும் வயிற்றில் இந்த பழத்தை சாப்பிடும் போது இது உடலின் நச்சு நீக்க செயல்முறையை தூண்டி, இதய நோய்க்கு காரணமாக இருக்கும் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை வெளியேற்றும். அதுமட்டுமல்லாமல் இதிலிருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து பக்கவாதம் மற்றும் பிற இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.