Kitchen Tips : தரையில் எண்ணெய் கொட்டிடுச்சா? வெறும் உப்பு போதும்! பிசுபிசுப்பு இல்லாம க்ளீன் பண்ணிடலாம்

Published : Sep 15, 2025, 03:54 PM IST

கிச்சன் தரை அல்லது மேடையில் கை தவறி எண்ணெய் கொட்டிவிட்டால் அதை சுத்தம் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

PREV
14
Kitchen Oil Spills

கிச்சனில் சமைக்கும் போது சில சமயம் கைத்தறி எண்ணெய் கிச்சன் மேடை அல்லது தரையில் கொட்டி விடுவோம், இல்ல சிந்தி விடுவோம். பேப்பர் வச்சு துடைத்தாலும் நிறைய பேப்பர் செலவாகும். எண்ணெய் கறையும் போகாது. ஈரமான துணியை கொண்டு துடைத்தாலும் அந்த இடம் பிசுபிசுப்பாகவே இருக்கும். ஆனா இது குறித்து நீங்க கவலைப்பட தேவையில்லை. உப்ப வச்சு சுலபமாக அதை சுத்தம் செய்து விடலாம் தெரியுமா? அது எப்படி என்று இப்போது பார்க்கலாம் வாங்க.

24
எண்ணெய் பிசுப்பை உப்பு

கிச்சன் மேடை அல்லது தரையில் எண்ணெய் சிந்து விட்டால் உடனே பதறாதிங்க உங்கள் வீட்டில் இருக்கும் உப்பு டப்பாவில் இருந்து சிறிதளவு உப்பை எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதை எண்ணெய் கொட்டிய இடம் முழுவதும் தூவி விடுங்கள்.

34
துணி அல்லது டிஷ்யூ பேப்பர் பயன்பாடு

உப்பு ஓரளவுக்கு எண்ணெயை உறிஞ்சி விடும். எனவே, ஒரு துணி அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு உப்பை எடுக்கவும். பிறகு எப்போதும் போல துடைக்கவும். இப்படி நீங்கள் செய்யும் போது தரையில் எண்ணெய் பிசுபிசுப்பே இருக்காது.

44
குறிப்பு

இப்போது எண்ணெயோடு சேர்த்து உப்பை எடுத்து அதை குப்பையில் போடுங்கள். பிறகு எண்ணெய் சிந்திய இடத்தை பார்த்தால் அந்த இடம் பளிச்சென்று இருக்கும். எண்ணெய் சிந்திய சுவடும் இருக்காது. கால் வைத்தால் கூட பிசுபிசுப்பாக இருக்காது. வழுக்கவும் செய்யாது. எனவே இனிமேல் தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் இந்த உப்பு டிப்ஸை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

Read more Photos on
click me!

Recommended Stories