Avocado Side Effects : அவகேடோ பழம் அவ்ளோ சத்துக்கள்.. ஆனா 'இவங்க' சாப்பிட்டா பக்க விளைவுகள்

Published : Sep 13, 2025, 03:12 PM IST

அவகேடோ பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும் அது சில உடல்நல பிரச்சினை உள்ளவர்களுக்கு கடுமையான விளைவை ஏற்படுத்தும்.

PREV
15
Avocado Side Effects

அவகேடோ பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றாகும். மற்ற எந்த பழத்திலும் இல்லாத அளவுக்கு வைட்டமின்கள், மினரல்கள் இதில் உள்ளன. வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகேடோ பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், அதன் தனித்துவமான பண்புகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக பெயர் பெற்றது. ஆனால் இந்த பழத்தை ஒருசிலர் சாப்பிட கூடாது. அவர்கள் யார் யாரென்று இந்த பதிவில் காணலாம்.

25
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்

உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்தால் இந்த பழத்தை சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவகேடோ பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளன. கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த பழம் நல்லதல்ல.

35
எடையை குறைக்க நினைப்பவர்கள்

நீங்கள் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் அவகேடோ பழத்தை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த பழத்தில் ஆரோக்கியமான கொழுப்பு இருந்தாலும் அதில் கல்லூரிகள் மிகவும் குறைவாகவே உள்ளன எனவே இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

45
இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள்

அவகேடோ பழத்தில் வைட்டமின் கே நிறைந்துள்ளன. இது ரஇத்த உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த உறைதலைக் தடுக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் வைட்டமின் கே உட்கொள்ளலில் எச்சரிக்கை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது இந்த மருந்துகளில் தலையிடக்கூடும்.

55
செரிமான பிரச்சனை உள்ளவர்கள்

அவகேடோ பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் கொழுப்பு சத்து உள்ளதால் சிலருக்கு இது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தை தவிர்ப்பது நல்லது.

லேடெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்கள்

லேடெக்ஸூக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவகேடோ பழம் லேடெக்ஸ் போன்ற ஒவ்வாமை எதிர் விளைவுகளைத் தூண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories