தக்காளியில் நன்மை செய்யும் பண்புகள் சில இருப்பதால் அவை இரத்தசோகை, ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது தவிர, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியாகவும் தக்காளி செயல்படும். தக்காளியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவுக்கு தீமைகளும் இருக்கிறது தெரியுமா? ஆம், தக்காளியை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும். இந்த பதிவில் தக்காளி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் 5 பிரச்சனைகள் குறித்து பார்க்கலாம்.