Kitchen Tips: கரப்பான் பூச்சிகள் என்றாலே இல்லத்தரசிகளுக்கு தலைவலி தான். கிச்சனில் அட்டகாசம் செய்யும் கரப்பான் பூச்சிகளை ஸ்பிரே இல்லாமல் வீட்டு பொருட்களை கொண்டே ஓட விடுவது குறித்து பார்ப்போம்.
நமது வீட்டின் சமையலறை என்பது உணவு சமைக்கும் இடம் மட்டுமல்ல, அது நம் ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது. கிச்சனில் சின்னதாக குப்பை இருந்தாலும் கரப்பான்பூச்சிகள் வந்து விடும். கரப்பான் பூச்சிகள் டைபாய்டு, அலர்ஜி போன்ற பல நோய்களைப் பரப்பும். நாம் கரப்பான் பூச்சிகளை விரட்ட ஸ்பிரேக்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த ஸ்பிரேக்களில் ஆபத்தான ரசாயனங்கள் உள்ளன. வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை வைத்தே கரப்பான்பூச்சிகளை விரட்டலாம். எது எப்படி? எனது குறித்து விரிவாக பார்க்கலாம்.
24
கிராம்பு
சமையலறையில் இருக்கும் கிராம்பு, உணவின் சுவையைக் கூட்டுவதோடு, கரப்பான்பூச்சிகளையும் விரட்டுகிறது. கிராம்பின் வாசனையை கரப்பான்பூச்சிகளால் தாங்க முடியாது. சமையலறை டிராயர்கள் மற்றும் கப்போர்டுகளில் 8-10 கிராம்புகளைப் போட்டு வையுங்கள். அந்த வாசனைக்கு கரப்பான்பூச்சிகள் வராது. பேக்கிங் சோடாவை கரப்பான்பூச்சி சாப்பிட்டவுடன் இறந்துவிடும். சமையல் சோடாவையும், பொடித்த சர்க்கரையையும் சம அளவில் கலந்து கிச்சன் மூலைகள், சிங்க் அடியில், அலமாரிகளுக்குப் பின்னால் தூவி விடுங்கள். சர்க்கரை வாசனைக்கு வரும் கரப்பான்பூச்சி, பேக்கிங் சோடாவைத் தின்று இறந்துவிடும்.
வேப்பிலைகள்
வேப்பிலைகள் நம் உணவின் மணத்தை அதிகரிக்கும். ஆனால், கரப்பான்பூச்சிகளுக்கு அதன் வாசனை பிடிக்காது. 5-6 வேப்பிலைகளைத் தூள் செய்து சமையலறையின் மூலைகளில் போட்டு வையுங்கள். இந்த வாசனைக்கு கரப்பான்பூச்சிகள் உடனடியாக ஓடிவிடும்.
34
வேப்ப எண்ணெய்
உங்கள் வீட்டில் கரப்பான்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தலாம். வேப்ப எண்ணெயை தண்ணீருடன் கலந்து, கரப்பான்பூச்சிகள் இருக்கும் இடத்தில் ஸ்பிரே செய்யுங்கள். கரப்பான்பூச்சிகள் உள்ள இடங்களில் வேப்பம் பொடியையும் தூவலாம். இனி உங்கள் வீட்டு பக்கமே கரப்பான் பூச்சிகள் தலை வைத்து படுக்காது.
வினிகர்
சமையலறையிலிருந்து கரப்பான்பூச்சிகளை விரட்ட வினிகரும் ஒரு சிறந்த மற்றும் எளிதான ஆயுதம் ஆகும். வெள்ளை வினிகரையும் தண்ணீரையும் சம அளவில் ஒரு ஸ்பிரே பாட்டிலில் கலக்கவும். இரவில் கிச்சனை சுத்தம் செய்த பிறகு, கேஸ் ஸ்டவ் மற்றும் சிங்க் பகுதியைச் சுற்றி இதைத் தெளிக்கவும். கரப்பான் பூச்சிகள் நெருங்காது.
இறுதியாக, எலுமிச்சை சாறு ஒரு சிறந்த க்ளீனிங் ஏஜென்டாக செயல்படுகிறது. ரசாயனங்கள் இல்லாத இந்த எலுமிச்சை சாற்றை கரப்பான்பூச்சிகளை விரட்டப் பயன்படுத்தலாம். இரண்டு எலுமிச்சைகளின் சாற்றை ஒரு பக்கெட் தண்ணீரில் கலந்து சமையலறைத் தரையைத் துடையுங்கள். எலுமிச்சையின் சிட்ரஸ் வாசனையும், சுத்தமும் கரப்பான்பூச்சிகளின் இனப்பெருக்கத்தைத் தடுக்கும். அவற்றை ஓட ஓட விரட்டும்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை ஒரு மசாலாப் பொருள் மட்டுமல்ல; கரப்பான் பூச்சிகளை விரட்டியடிக்கும் பொருளாகவும் செயல்படுகிறது. சமையலறையின் மூலைகளில் இலவங்கப்பட்டை தூளைத் தூவி விடுங்கள். இதன் வாசனை கரப்பான்பூச்சிகள் வருவதைத் தடுக்கும். இதேபோல் புதினா எண்ணெயின் வாசனையை கரப்பான்பூச்சிகளால் தாங்கிக்கொள்ள முடியாது. தண்ணீரில் சில துளிகள் புதினா எண்ணெயைக் கலந்து தெளிக்கவும். சமையலறையில் புதினா எண்ணெய் தெளித்தவுடன் கரப்பான்பூச்சிகள் அங்கிருந்து ஓடிவிடும்.
வெள்ளரிக்காய் தோல்
நாம் குப்பையில் வீசும் வெள்ளரிக்காய் தோல்கூட கரப்பான்பூச்சிகளை விரட்ட உதவும். வெள்ளரிக்காய் தோல்களை ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு இரவு முழுவதும் அப்படியே விடுங்கள். வெள்ளரி மற்றும் அலுமினியத்தின் வினை, கரப்பான்பூச்சிகளால் தாங்க முடியாத ஒரு வாசனையை உருவாக்கும். இதை கிச்சனில் தெளித்தால் கரப்பான் பூச்சிகள் ஓடி விடும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.