உங்க ஃபேவரிட் ஐஸ்கிரீம் எது? அது சொல்லும் உங்க 'கேரக்டர்'.. யாரும் சொல்லாத ரகசியம் இதோ!

Published : Apr 10, 2026, 03:06 PM IST

Ice Cream & Personality: தமிழகம் முழுவதும் வெயில் போட்டுத்தாக்கி வருகிறது. அடிக்கும் வெயிலுக்கு இதமாக இருக்கும் ஐஸ்கிரீம்களை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. உங்களுக்கு பிடிச்ச ஐஸ்கிரீம் வைத்து உங்க குணாதியசத்தை இந்த செய்தியில் சொல்கிறேன். 

PREV
14
ஐஸ்கிரீம் சொல்லும் உங்கள் கேரக்டர்

ஒருவருடைய குணத்தை தெரிந்துகொள்ள யாருக்குத்தான் ஆர்வம் இருக்காது? நிபுணர்களின் கருத்துப்படி, நாம் உட்காரும் விதம், கைவிரல்களின் வடிவம் மட்டுமல்ல, நாம் சாப்பிடும் ஐஸ்கிரீம் கூட நம் குணத்தை வெளிப்படுத்துமாம். என்னடா சொல்ற? ஐஸ்கிரீம் எப்படி கேரக்டரை சொல்லும் என நீங்கள் கேட்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜஸ்கிரீம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. வாங்க உங்கள் பேவரிட் ஐஸ்கிரீம் வைத்து உங்கள் குணத்தை நான் சொல்கிறேன்.

24
வெண்ணிலா ஃப்ளேவர் ஐஸ்கிரீம்

உங்களுக்கு வெண்ணிலா ஃப்ளேவர் பிடிக்கும் என்றால், நீங்கள் மிகவும் சுதந்திரமானவர். அன்பு அதிகம் கொண்டவர். எந்த விஷயத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்வீர்கள். அதே சமயம், நீங்கள் ஒரு எமோஷனல் டைப்.

சாக்லேட் ஃப்ளேவர் ஐஸ்கிரீம்

சாக்லேட் ஐஸ்கிரீம் பிரியர்கள் மிகவும் சென்சிடிவ் ஆனவர்கள். எல்லாரிடமும் எளிதாகப் பழகுவார்கள். ஆனால், எவ்வளவு சீக்கிரம் ஒரு உறவைத் தொடங்குகிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து விலகவும் வாய்ப்புள்ளது. இவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாம்.

34
ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர் ஐஸ்கிரீம்

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் இன்ட்ரோவெர்ட்ஸ் (Introverts). இவர்கள் மிகவும் பொறுமையானவர்கள். எந்த வேலையையும் அதிக ஈடுபாட்டுடன் செய்வார்கள். இவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றி நல்ல தொலைநோக்குப் பார்வை இருக்கும்.

காபி ஃப்ளேவர் ஐஸ்கிரீம்

காபி ஃப்ளேவர் ஐஸ்கிரீம் பிடித்தவர்கள் எப்போதும் ஜாலியாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். இவர்கள் தேவைக்கு அதிகமாக வேலைகளை ஏற்றுக்கொண்டு, அதை பாதியிலேயே விட்டுவிடும் பழக்கம் கொண்டவர்கள். பொறுப்பு குறைவாக இருப்பதால், அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்.

44
புதினா சாக்லேட் சிப்ஸ் ஐஸ்கிரீம்

புதினா சாக்லேட் சிப்ஸ் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். இவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள். எதிர்காலத்தைப் பற்றி தெளிவான திட்டமிடல் இவர்களிடம் இருக்கும். பார்ப்பதற்கு கடினமாகத் தெரிந்தாலும், சில சமயங்களில் மென்மையாக நடந்துகொள்வார்கள்.

பொறுப்பு துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான மக்களின் விருப்பம் மற்றும் உளவியல் ரீதியான சில ஜாலியான கணிப்புகளின் அடிப்படையிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. ஒருவரின் குணாதிசயத்தை அவர் உண்ணும் உணவை வைத்து மட்டுமே தீர்மானிக்க முடியாது. இது வாசகர்களின் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பகிரப்படுகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories