தினமும் அதிகாலை எழுந்தவுடன் பலரும் டீ, காபி குடிப்பது வழக்கம். ஆனால் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 1 கிளாஸ் ஊற வைத்த வெந்தய நீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தினமும் வெந்தயம் ஊற வைத்த நீர் குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பது இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஜர்னல் ஆஃப் ஃபுட் காம்போசிஷன் அண்ட் அனாலிசிஸில் வெளியிடப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
28
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
வெந்தயத்தில் உள்ள சேர்மங்கள் சிறந்த இன்சுலின் செயல்பாட்டை ஆதரிக்கின்றன. இரத்த சர்க்கரையை இயற்கையாகவே கட்டுப்படுத்த விரும்புவோருக்கு இது மிகவும் நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
38
டைப் 2 நீரிழிவைத் தடுக்கிறது
வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இது சர்க்கரையின் உறிஞ்சுதலைக் குறைத்து, இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. நீரிழிவு நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தினமும் வெந்தய பொடியை உட்கொள்பவர்களுக்கு இன்சுலின் உணர்திறன் கணிசமாக மேம்பட்டதாகவும், காலப்போக்கில் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தி, பசியைக் குறைத்து, எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நாள் முழுவதும் நிலையான ஆற்றலுக்காக ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது.
58
செரிமானப் பிரச்சினைகளைக் குறைக்கும்
வெந்தயம் வயிற்று வலி, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்றவற்றைக் குறைக்கிறது. இதில் உள்ள அதிக கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் மலம் கழிப்பதை எளிதாக்கி, ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
68
கெட்ட கொழுப்பைக் குறைக்கும்
வெந்தயம் ஊற வைத்த நீரைத் தொடர்ந்து குடிப்பது எல்டிஎல் (கெட்ட) கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் குறையும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், கொழுப்புகள் ரத்தக்குழாயில் படிவதையும் தடுக்க உதவுகிறது.
78
சருமத்தைப் பாதுகாக்கும்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வெந்தயம் ஊற வைத்த நீர், சரும நிறத்தை மேம்படுத்தவும், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்கவும், இயற்கையான பொலிவைத் தரவும் உதவும். இது பொடுகைக் குறைத்து, ஆரோக்கியமான உச்சந்தலையைப் பராமரிக்க உதவுகிறது.
88
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
வெந்தயம் ஊற வைத்த நீரில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உள்ளது. இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கவும் வெந்தயம் உதவுகிறது. ஃபிளாவனாய்டுகள், பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வெந்தயம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது.