சில சமயங்களில் சமைக்கும்போது கூட்டு, பொரியல், குழம்பு தீந்து போகும். இன்னும் சில சமயங்களில் அடுப்பு சிம்மில் தான் இருக்கிறது என்று நினைத்து வேற வேலையை பார்ப்போம். இதனால் பாத்திரம் அடிபிடித்து விடும். இந்த பிரச்சனை எல்லா வீடுகளிலும் நடப்பதுதான்.
24
How To Clean Burnt Vessels
அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்வது ரொம்பவே கடினமாக இருக்கும். ஓரளவுக்கு கழுவிய பிறகும் அதை பயன்படுத்தினால் கருகிய வாசனை உணவில் வீசும். எனவே அடிப்பிடித்த பாத்திரத்தை சுலபமாக சுத்தம் செய்வதற்கு ஐஸ் கட்டி பயன்படுத்தலாம். அது எப்படியென்று இந்த பதிவில் காணலாம்.
34
ஐஸ் கட்டியை எப்படி பயன்படுத்த வேண்டும்?
இதற்கு முதலில் அடிபிடித்த பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக பாத்திரத்தில் சுமார் 15-20 ஐஸ் கட்டிகளை போடவும். பிறகு ஒரு கரண்டி கொண்டு எங்கெல்லாம் அடிப்பிடித்திருக்கிறதோ அந்த பகுதியில் ஐஸ்கட்டியை நன்கு தேய்க்க வேண்டும். இதனால் பாத்திரத்தில் இருக்கும் கறையானது கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். பாத்திரத்தில் ஓரளவு கறை நீங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
பாத்திரத்தில் முக்கால்வாசி கறையை ஐஸ் கட்டியே நீக்கிவிடும். அடுப்பை அணைத்த பிறகு பாத்திரத்தில் சூடான நீரை ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து டிஷ் வாஷ் சோப்பு அல்லது லிக்விட் பயன்படுத்தி பாத்திரத்தை நன்கு சுத்தம் செய்து பாருங்கள். கறை மொத்தமும் நீங்கி இருக்கும். பாத்திரமும் புதுசு போல மின்னும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.