என்னதான் கத்தரிக்காயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும் நம்மில் நிறைய பேருக்கு கத்தரிக்காய் பிடிக்கவே பிடிக்காது. குறிப்பாக குழந்தைகளும், இளைஞர்களும் கத்தரிக்காயை கண்டாலே ஓடி விடுவார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மட்டும்தான் கத்தரிக்கையை விரும்பி சாப்பிடுவார்கள். கத்திரிக்காயில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை சாப்பிடுங்கள்.
இப்போது முக்கியமான விஷயம் என்னவென்றால் கத்தரிக்காயில் பல நிறங்கள் உள்ளன. ஒவ்வொரு நிற கத்தரிக்காயும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. சரி இப்போது இந்த பதிவில் எந்த நிற கத்தரிக்காயில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
24
ஊதா நிற கத்தரிக்காய் :
இந்த நிற கத்திரிக்காயானது பூவிலிருந்து காயாக மாறும்போது சூரிய ஒளியிலிருந்து அதன் நீல நிறத்தையும் பூமியிலிருந்து இரும்புச் சக்தியும் கிரகித்துக் கொள்ளும். இதனால்தான் அதன் போல் ஊதா நிறத்திலும், உள்ளே வெள்ளையாகவும் இருக்கிறது. இந்த ஊதா நிறக் கத்தரிக்காயானது கல்லீரல் நோய், இரத்த குறைபாடு, உடல் சோர்வு, மந்த தன்மை ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வை கொடுக்கும்.
34
வெள்ளை நிற கத்தரிக்காய் :
வெள்ளை நிறை கத்தரிக்காயானது பித்தத்தை சரிச்செய்யும். மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும். கல்லீரல் செயல்பாடுகளுக்கு இந்த கத்தரிக்காய் ரொம்பவே நல்லது. ஆனால் இதை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுக்காதீர்கள். ஏனெனில் அது அவர்களுக்கு அஜீரண கோளாறை ஏற்படுத்தும்.
இந்த கத்தரிக்காய் வெள்ளை நிற கத்தரிக்காய் போல்தான் பல நன்மைகளை கொண்டுள்ளன. கல்லீரல் வீக்கத்தை சரி செய்ய உதவும்.
இனி நீங்கள் கத்தரிக்காயை தேர்வு செய்யும் போது உங்களது உடல் ஆரோக்கியத்திற்கு எது நல்லது என்பதை அறிந்து தேர்வு செய்து சாப்பிடுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.