Parenting Tips : பெற்றோரே! 5 வயசு வரைக்கும் இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்துடாதீங்க... ரொம்ப மோசமான பாதிப்பு

Published : Dec 22, 2025, 04:53 PM IST

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்கக் கூடாது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

PREV
17
Unhealthy Foods For Kids

குழந்தைகளை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இப்படியிருக்கையில் குழந்தைகள் அழுது அடம் பிடிக்கும் போது அவர்கள் விரும்பி கேட்கும் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை பெற்றோர்கள் வாங்கி கொடுப்பார்கள். ஆனால் அது தவறு. அந்த வகையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சில உணவுப் பொருட்களை கொடுக்கவே கூடாது. அவை என்னென்ன? ஏன் அவற்றை கொடுக்கக் கூடாது என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

27
தேன் :

தேன் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது செரிமானத்தை சீராக்கும் மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். ஆனால் இதை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுத்தால் அது எளிதில் ஜீரணமாகாது.

37
இறைச்சி

சரியாக வேக வைக்காத இறைச்சி மற்றும் பிற உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும். அதுபோல அதிக குளிர்ச்சியாக இருக்கும் பழச்சாறுகளையும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

47
நட்ஸ்கள் :

பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அவற்றை சரியாக மென்று சாப்பிடாவிட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

57
குளிர்பானங்கள் :

பொதுவாக குளிர்பானங்களில் சர்க்கரை, காஃபின் போன்றவை அதிக அளவில் இருக்கும். இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் செரிமானம், உடல் பருமன், வாயு தொல்லை ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

67
பாப்கார்ன்

பெரும்பாலான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டி எதுவென்றால் அது பாப்கான் தான். ஆனால் அதன் துகள்கள் குழந்தையின் நாசியில் ஒட்டுக் கொண்டால் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே பெற்றோர்களே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாப்கான் கொடுக்க வேண்டாம்.

77
பப்ஸ் மற்றும் சிப்ஸ் :

இவை குழந்தைகளுக்கு அஜீரணம், வாந்தி, வயிற்று வலி ஆகியவற்றை ஏற்படுத்துவதோடு, குடல் ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும். எனவே குழந்தைகளுக்கு இதுபோன்ற சிற்றுகளை ஒருபோதும் கொடுக்காதீர்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories