Brinjal Buying Tips : நல்ல கத்தரிக்காய் தான் வாங்குறீங்களா? சத்தான கத்தரியை வாங்குறது எப்படினு தெரியுமா?

Published : Dec 20, 2025, 01:09 PM IST

புழு, சொத்தை இல்லாமல் கத்தரிக்காயை வாங்குவது எப்படியென்று இந்த பதிவில் காணலாம்.

PREV
17
Brinjal Buying Tips

காய்கறிகளை பாத்து வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிலும் மற்ற காய்கறிகளை விட கத்தரிக்காயை வாங்குவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஏனெனில் கத்தரிக்காய் உள்ளே புழு சொத்தை இருக்கும். கத்தரிக்காய் பிரதான காய். சாம்பார், காரக்குழம்பு என பல சமையலுக்கு கத்தரிக்காய் பயன்படுத்துவோம். எனவே, அதை சரியாக பார்த்து வாங்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

27
கத்தரிக்காய் நன்மைகள் :

கத்தரிக்காய் என்ற பெயரை கேட்டாலே பலரது முகம் சுழியும். ஆனால் இதில் பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு கத்தரிக்காய் ரொம்பவே நல்லது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். இது தவிர உடல் எடையை குறைக்கவும், இதய ஆரோக்கியத்திற்கும் இது ரொம்பவே நல்லது.

37
கத்தரிக்காயை எப்படி பார்த்து வாங்கணும்?

தோலை கவனி!

கத்தரிக்காயை வாங்கும் முன் அதன் மேல் புறத்தோலின் நிறம் கொஞ்சம் பளபளப்பாகவும், டார்க்காகவும் மற்றும் மெலிதாகவும் இருந்தால் வாங்குங்கள். ஒருவேளை அதன் தோல் மஞ்சள், பழுப்பு நிறத்தில் இருந்தாலும் அல்லது அதன் மேல் கரும்புள்ளிகள் இருந்தாலும் அதை வாங்க வேண்டாம்.

47
அழுத்திப் பார்!

மார்க்கெட்டில் கத்தரிக்காய் வாங்கும் முன் அதை அழுத்தி பார்த்து வாங்கவும். அதாவது கத்தரிக்காய் அழுத்தும் போது விரல் உள்ளே போனாலோ அல்லது மிகவும் கடினமாக உள்ளே பதியாமல் இருந்தாலோ அவற்றின் உள்ளே விதை அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். விதை அதிகமாக இருந்தால் சுவையாக இருக்காது.

57
தண்டு பகுதி :

கத்தரிக்காயை வாங்கும் போது அதன் தண்டு பகுதியில் ஏதேனும் சிறிய ஓட்டைகள் இருந்தாலோ அல்லது அதை சுற்றி புழுக்கள் இருந்தாலும் அந்த கத்தரிக்காய் உள்ளே அழுகி இருக்கும் என்று அர்த்தம். கத்தரிக்காயின் தண்டு பகுதி பிரெஷ்ஷாகவும் பச்சையாகவும் தான் இருக்க வேண்டும். ஒருபோதும் கருப்பாக இருக்கவே கூடாது.

67
அளவு முக்கியம் :

கத்தரிக்காய் வாங்கும் போது அதன் அளவு பெரியதாக இருந்தால் அதனுள் விதை அதிகமாக இருக்கும் மற்றும் அது முற்றியது. இந்த கத்தரிக்காய் சுவையாக இருக்காது. எனவே எப்போதும் கத்திரிக்காய் வாங்கினாலும் சிறிய அளவில் அல்லது நடுத்தர அளவில் பார்த்து வாங்குங்கள்.

77
தொட்டு பார்த்து வாங்குங்கள் :

கத்தரிக்காயில் இரசாயன மருந்துகள் நிறைய தெளிக்கப்பட்டு இருக்கும். எனவே கத்தரிக்காயை தொட்டு பார்த்து வாங்கவும். நீங்கள் கத்தரிக்காயை தொடும்போது பிசுபிசுப்பாகவும், வழு வழுப்பாகவும் இருந்தால் அது நல்ல கத்திரிக்காய் அல்ல.

மேலே சொன்ன டிப்ஸ்களை மனதில் வைத்துக் கொண்டு இனி கத்தரிக்காயை வாங்குங்கள். அதன் உள்ளே சொத்து புழு இருக்காது. சுவையாகவும் இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories