பார்க்கவே அசிங்கமாக இருக்கும் மருக்கள் பலரையும் பாடாய்படுத்துகிறது. பருக்கள் வலியை கொடுப்பதில்லை. ஆனால் அதைப் பார்த்தால் நம் அருகில் இருப்பவர்கள் முகம் கொஞ்சம் கூசும். கை, கால், முகம், அக்குள் என எல்லா இடங்களிலும் இது ஏற்படும்.
24
மருக்களை நீக்க சிலர் பார்லருக்கும், இன்னும் சிலர் மருத்துவமனைக்கும் சென்று பணத்தை செலவழிக்கிறார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து பருக்களை எளிதாக விரட்டிவிடலாம். அவை என்னவென்று இங்கு காணலாம்.
34
மருக்களை விரட்டியடிக்க வெள்ளைப்பூண்டு போதும். இதற்கு 6-7 வெள்ளைப் பூண்டு தோல் உரித்து பேஸ்ட் ஆக்கி அதிலிருந்து சாற்றை மட்டும் தனியாக எடுத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா கலந்து அந்த கலவையை மருக்கள் இருக்கும் இடத்தில் பூசவும்.
ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு கழுவவும். இப்படி 4-5 நாட்கள் செய்து வந்தால் மருக்கள் தானாக உதிர்ந்து விடும். இனி மருக்கள் பிரச்சனை வரவே வராது.