மிக்ஸி ஜாரில் பூண்டு, வெங்காயம் அரைத்து போன்ற வாசனை பொருட்களை அரைத்த பிறகு ஜாரை நன்கு சோப்பு போட்டு, ஸ்கிரப்பர் வைத்து தேய்த்தாலும் அந்த கடுமையான வாசனை போகவே போகாது, இருந்து கொண்டே இருக்கும். ஒரு பைசா செலவில்லாமல் மிக்ஸி ஜாரில் வீசும் அந்த வாசனையை விரட்டுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
26
காபி பொடி
பொதுவாக எல்லாருடைய வீடுகளிலும் கண்டிப்பாக காபி பொடி இருக்கும். மிக்ஸி ஜாரில் அடிக்கும் பூண்டு வெங்காயம் வாசனையை போக்க காபி பொடி உதவும். இதற்கு முதலில் வெறும் தண்ணீரில் ஜாரை கழுவிய பிறகு அதில் 2 ஸ்பூன் காபி பொடியை சேர்த்து மிக்ஸி ஜார் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றவும். அரை மணி நேரம் அப்படியே ஊற விட்டு விட்டு பிறகு எப்போதும் போல சோப்பு போட்டு கழுவினால் அதில் அடிக்கும் கடுமையான வாசனை நீங்கிவிடும்.
36
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு :
பொதுவாக இவை இரண்டுமே துர்நாற்றத்தை விரட்டி நல்ல வாசனையை கொடுக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அந்த பேஸ்டை மிக்ஸி ஜாரில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்து கழுவினால் மிக்ஸி ஜாரில் வீசிய கடுமையான வாசனை நீங்கிவிடும். நல்ல மணம் வீசும்.
வினிகர் மற்றும் உப்பு இவை இரண்டுமே ஏப்பேற்பட்ட நாற்றத்தையும் நொடியில் நீக்கும் தன்மை கொண்டது. இவை இரண்டையும் பயன்படுத்தி மிக்ஸி ஜாரில் அடிக்கும் நாற்றத்தை போக்கிவிடலாம். இதற்கு மிக்ஸி ஜாரை வெறும் தண்ணீரில் கழிவு விட்டு பிறகு அதில் ஒரு கப் சூடான நீரை ஊற்றவும். பின் ஒரு கைப்பிடி கல் உப்பு மற்றும் 10 மில்லி அளவு வினிகர் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு அந்த நீரை கொட்டி விட்டு எப்போதும் போல சோப்பு போட்டு சுத்தம் செய்யவும். இப்படி செய்தால் மிக்ஸி ஜாரில் அடிக்கும் கடுமையான வாசனை நீங்கும்.
56
ஆரஞ்சு பழத்தோல் :
மிக்ஸி ஜாரில் அடிக்கும் கடுமையான வாசனையை விரட்ட ஆரஞ்சு பழத்தோல் உதவும். இதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஆரஞ்சு பழ தோலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு அந்த நீரை ஆற வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது சில துளிகள் அந்த நீரை மிக்ஸி ஜாரில் ஊற்றவும். சோப்பு லிக்விட் சில துளிகளையும் ஊற்றி ஸ்க்ரப்பர் கொண்டு நன்கு கழிவினால் ஜாரில் அடிக்கும் வாசனை நீங்கிவிடும்.
66
வாழைப்பழத் தோல் :
பொதுவாக வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு அதன் தோலை குப்பையில் போட்டு விடுவோம். ஆனால் மிக்ஸி ஜாரில் அடிக்கும் கடுமையான நாற்றத்தைப் போக்குவதற்கு இதை பயன்படுத்தலாம். இதற்கு வாழைப்பழத் தோலை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி ஜாரில் போடவும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் அரிசிமாவு மற்றும் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து மிக்ஸியை ஒருமுறை அரைக்கவும். இப்படி செய்தால் ஜாரில் அடிக்கும் கடுமையான வாசனை நீங்கும்.