Winter Vegetable Storage Tips : குளிர்காலத்தில் மறந்தும் இந்த காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க! சீக்கிரமே அழுகிடும்

Published : Dec 17, 2025, 05:59 PM IST

குளிர்காலத்தில் ஃப்ரிட்ஜில் எந்தெந்த காய்கறிகளை வைக்க கூடாது? அதற்கான காரணம் என்ன என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

PREV
17
Winter Vegetable Storage Tips

பொதுவாக நம் எல்லாருடைய வீடுகளிலும் காய்கறிகளை வாங்கிட்டு வந்த உடனே பிரிட்ஜில் ஸ்டோர் செய்வது வழக்கம். ஆனால் எல்லா சீசனிலும் எல்லா காய்கறிகளையும் ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்க கூடாது தெரியுமா? அதுவும் குளிர்காலத்தில் சில குறிப்பிட்ட சேமித்து வைக்க கூடாது. அப்படி என்னென்ன காய்கறிகளை குளிர்காலத்தில் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது? அதற்கான காரணம் என்ன என்று இப்போது இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

27
கேரட் :

அதுபோல குளிர்காலத்தில் கேரட்டை பிரிட்ஜில் வைக்க கூடாது. ஏனெனில் அதிக குளிர்ச்சி காரணமாக அதுவும் சுருங்கி அதன் கெட்டி தன்மையை இழந்து விடும். மேலும் அதன் சுவையும் மாறிவிடும்.

37
தக்காளி :

குளிர்காலத்தில் தக்காளியை ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்க கூடாது. காரணம் தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்தால் அவற்றின் தன்மை, சுவை முற்றிலும் மாறிவிடும். அதற்கு பதிலாக தக்காளியை அறையின் வெப்பநிலையில் வையுங்கள். ஒரு வாரத்திற்கு மேல் கெட்டுப் போகாமல் பிரஷ்ஷாக இருக்கும். அதுபோல தக்காளியை அதிகமாக வாங்காம்ல வாரத்திற்கு ஒரு முறை வாங்கி பயன்படுத்துவது நல்லது.

47
காலிஃப்ளவர் :

குளிர்காலத்தில் காலிஃப்ளவரை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வீணாகிவிடும். மேலும் அதன் பூக்களும் சீக்கிரமாகவே சுருங்கிவிடும்.

57
கீரை :

கீரையை தினமும் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. ஆனால் குளிர்காலத்தில் கீரை அவ்வளவாக கிடைக்காது. இதனால் கிடக்கும் போது அதை வாங்கி ஃப்ரிட்ஜில் சேமித்து வைப்போம். ஆனால் கீரையை நீண்ட நாள் பிரிட்ஜில் சேமித்து வைக்க கூடாது. எனவே, கீரை வாங்கிய சுமார் 12 முதல் 24 மணி நேரத்திற்குள் அதை சமைக்கவும். இல்லையெனில் அவற்றில் இருக்கும் இயற்கையான சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு குறைந்துவிடும்.

67
இஞ்சி :

பொதுவாக மற்ற சீசனை விட இஞ்சியை குளிர்காலத்தில் அதிகமாகவே வாங்கி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைப்போம். காரணம் குளிருக்கு இதமாக அவ்வப்போது இஞ்சி டீ போட்டு குடிப்போம். அதுபோல சமையலுக்கு இஞ்சியை அதிகமாக பயன்படுத்துவோம். ஆனால் இஞ்சியை குளிர்காலத்தில் ஸ்டோர் செய்து வைத்தால் சீக்கிரமாகவே அது கெட்டுப் போய்விடும். கெட்டுப் போன இஞ்சியை தெரியாமல் கூட பயன்படுத்தினால் சிறுநீரகங்கள், கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிப்படையும்.

77
உருளைக்கிழங்கு :

குளிர்காலம் மட்டுமல்ல எந்த பருவத்திலும் உருளைக்கிழங்கை ஒருபோதும் ஃப்ரிட்ஜில் சேமிக்க கூடாது. அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

Read more Photos on
click me!

Recommended Stories