பொதுவாக பிறந்த குழந்தைகளை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதுவும் குளிர் காலத்தில் சொல்லவே வேண்டாம். ஏனென்றால் குளிர் காலத்தில் குழந்தைக்கு சளி பிடித்துவிடுமோ, காய்ச்சல் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அம்மாக்கள் இருப்பார்கள். இது தவிர குளிர்காலத்தில் குழந்தைக்கு எது கொடுக்கலாம்? எது கொடுக்கக் கூடாது? போன்ற பல சந்தேகங்களும் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் பிறந்த குழந்தையை தினமும் குளிப்பாட்டலாமா? கூடாதா? என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
26
குளிர்காலத்தில் பிறந்த குழந்தையை தினமும் குளிப்பாட்டலாமா?
பொதுவாக குளிர்காலத்தில் குழந்தையை குளிப்பாட்டினால் சளி, காய்ச்சல் வந்துவிடுமோ என்று நினைத்து பல அம்மாக்கள் குழந்தையை குளிப்பாட்டுவதைத் தவிர்த்து விடுவார்கள் ஆனால் குழந்தையின் சருமம் வறட்சி அடையாமல் இருக்க தினமும் குளிக்க வைக்கலாம். அதுவும் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் தான். வேண்டுமானால் சூடான தண்ணீரில் ஒரு சுத்தமான காட்டன் துணியை நனைத்து அதைக் கொண்டு குழந்தையின் முழு உடலையும் துடைத்து எடுக்கலாம்.
36
கெமிக்கல் சோப்பு வேண்டாம் :
குழந்தையை குளிப்பாட்டுவதற்கு பேபி சோப்பு பயன்படுத்துவது அவர்களின் சருமத்திற்கு நல்லதல்ல. குறிப்பாக அதிக கெமிக்கல் மற்றும் அதிக நுரை தரும் சோப்பை ஒருபோதும் குழந்தைக்கு பயன்படுத்த வேண்டாம். அதுபோல குழந்தைக்கு பயன்படுத்தும் சோப்பில் பிஹெச் அளவானது 5.5 கண்டிப்பாக இருக்க வேண்டும். முடிந்தவரை சோப்பிற்கு பதிலாக பாசிப்பருப்பு மாவை பயன்படுத்துவது சிறந்தது.
குழந்தையை குளிப்பாட்டும் முன் குழந்தையின் சருமத்தை ஈரப்பதமாக வைக்க ஆயில் மசாஜ் செய்வது நல்லது. இதனால் குழந்தையின் சருமம் வறட்சி ஆகாமல் இருக்கும்.
56
குளிப்பாட்டி பிறகு செய்ய வேண்டியவை :
குழந்தையை குளிப்பாட்டிய பிறகு மெல்லிய காட்டன் துணியை பயன்படுத்தி குழந்தையின் சருமத்தை ஒத்தியெடுக்க வேண்டும். அதுபோல சூடான நீரில் அலசிய ஆடையை குழந்தைக்கு அணிவிப்பது ரொம்பவே நல்லது. குளிர்காலத்தில் குழந்தைக்கு கனமான ஆடையை அணிவியுங்கள். ஆனால் இறுக்குமான ஆடைகளை பயன்படுத்த வேண்டாம்.
66
நினைவில் கொள் :
உங்களது குழந்தை குறைவான எடையில் பிறந்திருந்தால் தினமும் குளிப்பாட்ட வேண்டாம். அதற்கு பதிலாக மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் குழந்தையின் சருமத்தை துடைத்தால் போதும்.
குளிர்கால மட்டுமல்ல எந்த பருவத்திலும் குழந்தையை இப்படி பராமரித்து வந்தால் ஆரோக்கியமாக இருப்பார்கள்.