கனவு என்றால் என்ன
கனவு என்பது, நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம் எண்ண ஒட்டங்கள் பெருமூளைக்கும் சிறுமூளைக்கும் கடந்துகொண்டிருக்கும். அதன் சில குளறுபடிகளே இந்த கனவுகள் ஆகும். நமக்கு தெரிந்த விஷயங்கள், நாம் யோசித்த செய்திகள் அவைகள் மட்டுமே கனவில் வரும். கனவில் நடந்தவையின் பெரும் பகுதி முழிக்கும் போது நினைவில் இருக்காது.
கனவுகள் பலிக்குமா?
கனவு சாஸ்திரம் கூறுவதன் அடிப்படையில், ஒரு கனவு குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் அது நனவாகும் என்பது ஐதீகம். எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும் என்று தானே கீட்கிறீர்கள்? தெரிகிறது. பிரம்ம மூகூர்தத்தில் வரும் கனவு பலிக்கம் என்கிறது கனவு சாஸ்திரம். அறிவியல் கூற்றுப்படி இது உண்மை அல்ல.
தூங்கும் போது கீழே விழுவது போல் உணர்வு வருகிறதா? காரணம் இதுதான்!!
கனவுகள் எப்போது வரும்
மதியவேளை ஆழ்ந்த உறக்கத்தில் கூட கனவு வரலாம். பொதுவாக இரவில் வரும். நிஜமாகவே நடப்பது போன்ற கனவுகள் வரலாம். கனவில் வரும் சில குறிப்புகள் உங்களின் நன்மை மற்றும் தீமையை குறிக்கிறது. மழை, வெண்சங்கு ஆகியவற்றை கண்டால் உங்களுக்கு விரைவில் நல்லது நடக்கபோகிறது என்று கனவு சாஸ்திரம் சொல்கிறது.
பால், மலை, கனிகள் நிறைந்த மரம், மலர்கள் போன்றவை உங்கள் கனவில் வந்தால், அவை அனைத்தும் நல்ல சகுனத்தையே குறிப்பதாக கனவு சாஸ்திரம் சொல்கிறது.